பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உணர்ச்சிகளும் செம்மை நெறிகளும் தோன்றி வளர வித்திட்டவராவர். இளமையிலேயே இவர் சீர்திருத்த உணர்ச்சியாளராக வளர வாய்ப்பு அளித்தவர் இவர்தம் பாட்டியாரேயாவர். எனவே அப் பாட்டியார் மறைந்த போது, அவர்தம் இறுதிச் சடங்குகளை வைதிய முறையி லன்றி, தேவார, திருவாசகம் ஒதுவிக்கச் செய்து அவர் களைச் சிறப்பித்தார் மு. வ. அத் தேவார, திருவாசகப் பாடல்களை ஒதிச் சடங்குகளைச் செய்ய உதவியவன் நானே. அப்போது அந்த இரண்டு நாட்களில் வேலத் தில் இவரொடு தங்கிய காலத்தில் இவர்தம் பாட்டியாரைப் பற்றிக் கூறிய பண்பார் உணர்வுடைச் சொற்கள் இன்றும் என் மனத்திடை உள்ளன. இவர் இளமையில் பத்தாம் வகுப்பு வரையிலே முறை யாகப் பயின்ருர். முருகைய முதலியார் என்பவரிடம் முதலில் தமிழ் பயின்ருர். பின், பள்ளியிலோ கல்லூரி யிலோ சேரவில்லை எனினும், முறையாகக் கற்பன கற்று, உயர்ந்த டாக்டர் (பிஎச். டி.) பட்டம் பெறும் வரையில் பயின்று சிறந்து விளங்கினர். அது மட்டுமன்று; சென்னைப் பல்கலைக் கழகத்தில் முறையாகப் பயின்று கட்டுரை எழுதி முதன்முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவரே. பின் அமெரிக்க நாட்டு ஊஸ்டர் கல்லூரி இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்.) பட்டத்தையும் வழங்கியது. இப் பட்டம் பெற இவரை அழைத்ததும், பட்டம் பெற்றதும் பலருக்குத் தெரியா வகையில் அமைதியாகச் சென்று வந்ததோடு, அதுபற்றி யாரிடமும் கூறிக்கொண்டு விழா ஆற்றச் செய்யாது அமைந்து வாழ்ந்த இவர் வாழ்க்கை பொய்ப்புகழ் விரும்பிச் சுற்றிச் சுழலும் இவ்வுலகுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவர் வாழ்க்கை அல்லது உத்தியோகம் தமிழாசிரியர் என்பதில் தொடங்கவில்லை. திருப்பத்துர் தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராகவே பணி புரிந்தார். இவர்தம் நாவல்களிலும் சில கட்டுரைகளிலும் வரும் சில தாலுக்கா