பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 . கண்ணகி என்ற இரண்டு பாத்திரங்களைப் பற்றியும் தனித் தனியாக ஆராய்ந்து வெவ்வேறு நூல்களையும் வெளியிட் டுள்ளார் டாக்டர் மு. வ. - இந்நூலில் இளங்கோவடிகள் காலத்தை நிறுவிய இவர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறிய 'சிலப்பதிகாரம் திருஞான சம்பந்தரின் காலத்திற்குப் பிந்தியதாக இருக்க வேண்டும்' என்ற கூற்றை மறுப்பதில் காட்டுகின்ற பண்பாடு (ப. 11-14), கொள்கை மாறுபாடு கொண்டுள்ள அனைவருக்கும் இருக்கவேண்டிய ஒன்ரு கும். அப்படியே வேறு சிலர் கருத்துக்களை எடுத்துக் காட்டி, இவர் மறுக்கும் திறனும் பண்பும் வியக்கத்தக்கன. ஒரு தருக்க ஆசிரியருக்கு அமைய வேண்டிய பண்பு களோடு தம் கொள்கையினை அமைதியாகக் காட்டும் திறனும் இவரிடம் காண இயலும். இளங்கோவடிகள் உள்ளத்தை நூல்வழி ஆராய்ந்த இவர் அவர்தம் ஒற்றுமை நோக்கினைப் பற்றிப் பலவிடங் களில் சுட்டுகிருர், - 'ஆட்சியால் தமிழகம் மூன்ருகப் பிரிவுற்றிருந்த போதிலும், பண்பாட்டால், மொழிவகையால் தமிழர் என்று ஒர் இனம் வாழும் நாடே என்ற கொள்கையை வலியுறுத்த முயன்ருர் அவர். அதனால் முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரிய ஒரு காவியத்தைத் தமிழ கத்தின் பொதுக் காவியமாகவே ஆக்கித் தந்துள்ளார். ஒரு வேந்தனை மற்ருெரு வேந்தன் வெறுக்காத வகை யிலும் வெறுப்புத் தோன்றிலுைம் மாறித் திருத்தும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் அமைத்துத் தமிழகத் தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான் ருேர் இளங்கோவடிகள் ஆவர்" (ப. 30-31) என்று அவர் ஒற்றுமை உள்ளத்தைக் காண வைக்கிருர், இந்த நிலையிலேயே இவர் உள்ளம் உலகைத் தாவிக் காண்கின்றது. இளங்கோவடிகள் மட்டுமன்றி உலகத்துச்