பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சிறந்த கவிஞர்கள் அனைவருமே இந்த மரபினைச் சேர்ந் தவர்களே என்ற உண்மையையும் உணர்த்துகிருர். 'உலகத்துப் புலவர் பெருமக்களெல்லாம் ஓர் இனத்தார். இளங்கோ, காளிதாசர், ஹோமர், கம்பர் ஷேக்ஸ்பியர், கதே முதலான எல்லோரும் ஓரினம். அவர்களிடையே சாதி முதலிய பிரிவுகள் இல்லை. சமயம் முதலியவற்றல் ஏற்படும் வேறுபாடுகளைக் கடந்தவர்கள். அவர்கள் நாடு வெவ்வேறு. அறி வியல் முன்னேற்றத்தால் உலகம் ஒரு சிறுநாடுபோல் கருதப்படுவதற்கு முன்பே உலகத்தை ஒரு குடும்ப மாகக் கண்டவர்கள் அவர்கள்." (ப. 32) என்று ஒரே உலகக் கொள்கை இவர் உள்ளத்து எழ இவரும் அப்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க புகழ் நலத்தைப் பெறுகின் ருர். 'இளங்கோவடிகள் தமிழ்நாட்டுப்பற்று சோழ பாண் டிய சேர மன்னரை வாழ்த்தும் அன்பாக மட்டும் நிற்க வில்லை. நாடுகளையும் நகரங்களையும் ஆறுகளையும் சோலைகளையும் புகழும் ஆர்வமாக மட்டும் நிற்க வில்லை. சிறந்த கலைகளில் பயின்ற கலைஞர்களின் சிறப்பு களைப் போற்றுவதோடு மற்றும் நிற்கவில்லை. பந்தடிக்கும் பெண்கள் முதல் நெற்குற்றும் பெண்கள் வரையில், ஆயர் முதல் வேட்டுவர் குறவர் வரையில் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் ஆடல் பாடல்களையெல்லாம் போற்றுவதாக உயர்ந்து நின்றது'. (ப. 42-43) என்று இளங்கோவடிகள் உள்ளம் எல்லாரிடமும் பரந்து சென்று பற்றிய பான்மையைச் சுட்டும்போது இவரும் இதே வகையில் வாழ்ந்தவர் என்பதை நினைக்க வேண்டி யுள்ளது. இவ்வாறு இளங்கோவடிகளின் சிறப்பினை விளக்கிக் காட்டிய இவர், தொடர்ந்து நூல்வழியே சென்று பாத்தி