பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்தென்' என்ற அரங்கேற்று காதையின் கடைசி அடிக்கு சொல் சொல் லாகப் பிரித்துத் திறன்கண்டு அவற்ருல் விளக்கப்பெறும் வாழ்வின் விளக்கங்களைச் சுட்டிக்காட்டுகிருர்.(பக். 74-75) இவ்வாறே இளங்கோவடிகள் எடுத்தாளும் ஒவ்வொரு சொல்லின் திறமுமறிந்து அவற்றைப் பயன்படுத்திய நெறி யினையும் அவற்ருல் விளங்கவைக்கும் பொருளினையும் நுணுகி ஆராய்ந்து விளக்கும் திறன் நூல் வழியே செல் லின் நன்கு புலகுைம். அப்படியே இளங்கோவடிகளின் வருணனைத் திறனையும் உணர்ச்சிக்கேற்ற நடையமைக் கும் திறனையும் தம் நூலை நாடகப் போக்கில் நடத்திச் செல் லும் போக்கையும் பிறவற்றையும் தெள்ளத் தெளியக் காட்டுகின் ருர், இளங்கோவடிகள் அறவோராய் இருந்து, தாம் ஒர் அரசகுடும்பத்தில் பிறந்தவராயிருந்தும் மூவேந்தரையும் ஒப்ப நோக்கிய பண்பையும் சிறந்த செல்வியாகிய மாத வியைப் பழிக்காது உயர்த்திப் பாராட்டும் செம்மையினை யும் அதன் வழி எவ்வுயிரிடத்தும் அன்பினைக் காட்டும் அறவோர் செயலையும், தவறு செய்தவர்களைப் புண்படா மல் திருத்தும் நலத்தையும் காட்டி நடுநிலை பிறழா நல்ல வாய்மை நெறியைக் கடைப்பிடித்த தன்மையினை நன்கு காட்டுகிறர். அப்படியே இளங்கோவடிகள் சமண சமயத் தவராயிருப்பினும் சமயப் பொதுமை உடையராய் எல் லாச் சமயங்களுக்கும் ஏற்றங் காட்டிப் போற்றுவதையும் கூறத் தவறவில்லை. "இளங்கோவடிகள் பொழுதுபோக்குக்காக கலைக் காவியம் இயற்றிவில்லை. கற்பவரின் உள்ளத்தில் விழுமிய உணர்ச்சிகளைத் தோற்றுவித்து அவர்களை உயர்த்த வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். அதல்ை காவியத்தின் இறுதியில் கலைஞர் அறவோ ராகி நல்வழியை எடுத்துரைக்கிரு.ர்." -