பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 என்று இலக்கியத்தைக் காட்டி, அந்த இலக்கிய மனத் தைத் தேர்ந்தறியும் தும்பிகளாகப் புலவர்களைச் சுட்டுகிறர். இந்த இலக்கியம் பற்றிக் கூறுகின்ற இவர் உள்ளத்தில் மணிவாசகர், வள்ளலார் போன்ருர் வாக்குகள் அப்படி உணர்ச்சி பெற்று உருண்டோடி வருவதைக் காண முடிகின்றது. தானே, அந்த வண்டுகளுள்-திறனறியும் தெளிந்த வண்டுகளில் ஒன்ருக மாறிவிடுகிறர். மேலும் அப்புலவர்களையும் தும்பிகளையும் இணைத்துப் பார்க்கும் இவர் உள்ளம், "தேன் நுகரும் தும்பிகள் பாடி மகிழ்வன; கூடிக் களிப்பன. பாடாமல் இருத்தலும் அவைகளால் இயலாது; ஒருங்கே கூடாமல் இருந்தாலும் அவை களால் இயலாது. இந்த இருபெற்றியும் இலக்கியத தும்பிகளாகிய புலவர்க்கும் அமைந்துள்ளன. தாம் கண்ட புதிய கற்பனைகளையும் தாம் உணர்ந்த புதிய உணர்வுகளையும் பிறர்க்கு எடுத்துரைக்காமல் அமை யாக இருத்தல் புலவரால் இயலாது. தம்போன்ற மற்றப் புலவர் பெருமக்களோடு அளவளாவாமல் இருத்தலும் இயலாது" (ப. 41) எனப் ப்ேசுகின்றது. தொடர்ந்து தேன் நுகர்த லின் பயன்பற்றியும் நவில்தொறும் நயம்பற்றியும் பலவாறு சுட்டிக்காட்டி ஒலிநயத்தின் ஏற்றத்தினையும் விளக்கி, பாட்டின் ஒவ்வொரு சொல்லையும் பகுத்துப் பகுத்துப் உணர்ந்து உணர்ந்து அதன்திறனறிந்து தெளிய வைக்கிருர். பின் மனித மனத்தின் உயர்வையும் அது பொருள்களைத் துய்த்து உணரும் சிறப்பையும் எண்ணி எண்ணிக் காட்டுகிரு.ர். 'தும்பிகளுக்கு இல்லாத சிறப்பு மக்களின் மனத் திற்கு உள்ளது. நண்டுகள் தும்பியாவதில்லை. நாரை கள் தும்பியாவதில்லை. தும்பிகளும் நண்டு நாரை களைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுவதில்லை.