பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அலுவலகக் குமாஸ்தா'க்கள் இவர்தம் சொந்த வாழ்வின் அனுபவத்தில் முளைத்தனவேயாம். அப்படியே அந்தத் துறை அதிகாரிகள் பற்றிய குறிப்புக்களும் அமைவன வாகும். இளமை பற்றித் திரு. வி. க. 1935 ஆம் ஆண்டு முதல், 1939இல் பச்சையப்பர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பதவியேற்கும் வரை திருப்பத்துார் நகராட்சிப் பள்ளியில் தமிழாசிரிய ராகப் பணியாற்றினர். அக்காலத்திலேயும் பச்சையப்பரில் சில ஆண்டுகளிலும் இவர் தலைப்பாகை - பஞ்சகச்ச உடையுடன் பழைய பண்டிதர் கோலத்திலேயே காட்சி அளித்தார். பச்சையப்பரில் சேர்ந்த பிறகும் அதற்குழுன் சில ஆண்டுகளிலும் இவர் சென்னையில் பலரோடு பழகிய பழக்கமும் பழகிய இடங்களும் பிறவும் பின் இவர் சென்ற இடங்களில் கண்டவையும் கேட்டவையும் இவர்தம் நாவல்களுக்கும் பிறவற்றிற்கும் நிலைக்களன்களாகவும் நிகழிடங்களாகவும் வழிகாட்டிகளாகவும் அமைந்தன. இவர்தம் இளமையின் பொலிவைத் திரு. வி. க. அவர்கள் சுட்டிக்காட்டுவதை இங்கு எண்ணல் சிறப்புடையதாகும். (1944 - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள். ப. 803-805). "வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வாணம் முதலிய இடங்களுக்கு யான் அடிக்கடி செல் வேன். கூட்டங்களில் யான் மு. வரதராசனுரைப் பார்ப்பேன். அவர் என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பர். பின்னே நாங்கள் நெருங்கிப் பழகி ைேம். வரதராசனர் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக் கேற்ற முகம் வடிந்திருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தேன்.