பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கொண்டு அந்த இடங்களையெல்லாம் காட்டி மகிழ்ந்தமை இன்னும் நினைவில் உள்ளது. பக்கத்து மலையின் நடுப் பாகத்தில் உயர்ந்து நிற்கும் பகுதி ஒரு சிவலிங்கம்போல் தோற்றமளிக்கும். அந்தக் காட்சியினையும் அதன் சுற்றுப் புறக் காட்சிகளையும் இந்த ஒடையின் இனிமையையும் இவர் நன்கு கண்டு துய்த்தவர். அங்கே ஒருநாள் உலவிய போதுதான் இப்பாட்டிற்குப் புதுவிளக்கம் தன் உள்ளத் தில் புலப்பட்டது என்கிறர். அதைப் புதுவிளக்கம்'என்றே மூன்ருவது பகுதியில் தெள்ளத் தெளியக் காட்டுகிருர். கலைக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்பை நூல்களின் துணை கொண்டும் அறிஞர்கள் அறிவுரை கொண்டும் ஆராயும் ஆராய்ச்சியில் மனம் ஈடுபட்ட அந்தத் தொடக்க அனுபவத்தைச் சுட்டிக் காட்டி (ப. 9) மேலே செல்லு கின்ருர். இக்காலம் தான் (1944) இவர் நூல் எழுதத் தொடங்கிய காலம் எனலாம்; சிறப்பாக நாவல் எழுதத் தொடங்கிய காலம் எனலாம். பலவற்றையும் பழுதற நூல் கள் வழிக் கற்றும் அறிஞர் வாய்க் கேட்டும் சிந்தித்துச் சிந்தித்துத் தம் 30 வயதுக்கு மேலேதான் இவர் நூல் எழுதத் தொடங்கினர் என்பது ஈண்டு நினைவு கூர்தற் பாலது. இந்த உண்மையை உரைக்கும் முகத்தோடு, இப்பாடல் தந்த இன்பத்தை நமக்கு வாரி வழங்குகின்றர். மேலும் இத்தகைய முயற்சிக்கும் உணர்வுக்கும் வாழ்க்கை அனுபவம் தேவை என்பதையும் இவர் சுட்டிக் காட்டத் தவறில்லை. (ப. 11-12) "புலவர் பாடிய பாட்டு இருந்தும் பயன் இல்லை, சொற்பொருள் அறிவு இருந்தும் பயனில்லை; தெளிந்த வாழ்க்கை அனுபவம் வேண்டும் என்று உணர்ந் தேன்." (ப. 12) என்று தாம் பெற்ற அனுபவத்தைச் சுட்டிக் காட்டுகின்ருர். பின், பாட்டினையும் அதற்கு உரையாசிரியர் கண்ட பழம்பொருளையும் அவற்றெடு ஒட்டிய விளக்கங்களையும்