பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அவை அவை பொருள் விளக்கும் பான்மையினையும் இவர் காட்டுவதை நூல்வழியே செல்வார் உணர முடியுமே யன்றி இங்கே ஒருசில நிமிடங்களில் உணர்த்த முடியாது. இலக்கியத்தில் பெற்றியினையும் அது ஆற்றும் செயலையும் வியந்து வியந்து போற்றுகிருர் இவர். (ப. 119) வாயல் முறுவல்' என்ற தொடரை நன்கு விளக்கியதோடு, இத் தலைவி போன்றே கண்ணகியின் வாயல் முறுவல் தன்மை யினையும் விளக்கி, இருவரும் தோல்வியுற்ற நிலையினை நன்கு காட்டுகிருர் (ப. 130-134). 'ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒன்றி என்பதில் வரும் ஒன்று’ என்னும் சொல்லுக்கு மூன்று பக்க அளவில் இவர் காட்டும் திறனறி விளக்கம் உவந்து போற்றக் கூடியதாகும். இனி ஒவச் செய்தியை அடுத்துவரும் பகுதி யில் (4) விளக்குவதற்குத் தோற்றுவாயாக இப்பகுதியை முடிக்கும்போது 'மாமலர் மணிஉரு இழந்த அணியழி தோற்றத்தின் தன்மையைத் தொட்டுக்காட்டி விளக்கி ஒவச் செய்தியின் உள் புகுகின்ருர். இதற்கிடையில் தலைவி ஒவியமான நிலையினையும் அதற்கு அடிப்படையாக அமைந்த நிலைகளையும் இவர் சுட்டியுள்ளமை பயின்று துய்க்கத் தக்கதாகும். பின், இவர் எடுத்துக் கொண்ட ஒவச் செய்தி யினைப் பல சங்கப் பாடல்களின் துணைகொண்டு விளக்கி இலக் கிய மரபுகளையும் சுட்டிக்காட்டி, பல்வேறு பிரிவுகளின் தன்மைகளையும் போர்க்கடமை முதலியவற்றையும் குறித்து, கடைசியில் தான் பெற்ற தெளிவினையும் திட்ட மாகக் காட்டிவிடுகிரு.ர். "காதலர் வாழ்க்கையின் தூய்மையை அளந் தறிய ஒரு சிறந்த கருவி உண்டு; அதுதான் தன்னலத் துறவு-தியாகம். சாவது போன்ற துயர நிலையிலும் தன் துயரை அடக்கிக் காதலனுடைய புகழைக் காக் கும் ஆர்வம் தலைவியிடம் உண்டு. வாழ்நாள் முழுவ தும் தன்னலத் துறவு இருந்து வந்தால்தான், உயி