பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ரொடு போராடும் நிலையிலும் அந்த உயர்ந்த பண்பு ஒளி வீசும். இந்தப் பாட்டில் காணும் தலைவியின் வாழ்க்கை அத்தகைய ஒளிமிக்க வாழ்க்கை" (ப.175) என்று இப்பாட்டில் வரும் தலைவியின் சிறப்பை விளக்கிக் கடைசியாக இப் பாட்டினைப் பற்றியே ஒரு விளக்கம் தந்து இந்த நூலை முடிக்கின்றர். 'இப் பாட்டு ஒளிமிக்க ஒரு முழுமணி. இதன் தூய ஒளி கலைத்துறையிலும் வாழ்க்கையிலும் இருளைப் போக்க வல்ல சிறந்த விளக்கம். இத்தகைய மணிகள் பல சங்க இலக்கியப் பேழையுள் காணலாம். ஆயி னும் இந்த மணியே என் உள்ளத்தே போராட்டத்தை விளைத்து இறுதியில் இன்பப் பரிசையும் நல்கியது.ஆத லின் இந்த ஒரு மணியைப் பலமுறை எடுத்துக் கூறினேன்.” என்று தான் இந்தப் பாடலில் தன்னை மறந்து மூழ்கிய நிலை யினை விளக்குகிருர், சங்க இலக்கியங்கள் இந்த இரு தனிப்பாடல்கள் ஆய்வுப் பெருநூல்களே யன்றி, சில பாடல்களை அவ்வப்போது எடுத்து எழுதி இதழ்களுக்கு உதவியும் மேடையில் பேசியும் வந்த வற்றையெல்லாம் தொகுத்துச் சிறு நூல்களாகவும் அச்சிட் டுள்ளார். அவை நடைவண்டி, புலவர் கண்ணிர், முல்லைத் திணை, இலக்கியக் காட்சிகள், தமிழ் நெஞ்சம் போன்றவை யாகும். இவை அனைத்தும் சங்க காலப் பாடல்களை-அகம் புறம் இருவகைப் பாடல்களை - தனித்தனியாகவும் இணைத் தும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல்களாகும். இவற் றின் முன்னுரைகளிலேயே இந்நூல்களின் அமைப்பினை யும் எழுதிய நிலையினையும் இவர் சுட்டிக் காட்டிச் செல்லு கின்ருர்.ஒவ்வொரு நூலும் தனித்தனியாகத் திறனயும் நிலை யில் அமைந்து எடுத்துக்கொண்ட பாடல்களின் உட்கருத் துக்களையும் விளக்கங்களையும் கொண்டு விளங்குகின்றன.