பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 என்று தன் தமிழ்நெஞ்சம்' என்ற நூலின் முன்னுரையில் கூறி அந்நூலை எழுதத் தொடங்குகிருர். இலக்கியத்தில் வரும் காட்சிகள் பலவற்றைஇயற்கைக் காட்சி-வாழ்க்கைக் காட்சி-அவற்றின் பெறும் உணர்வு முதலியவற்றுள் சிலவற்றைத் தொகுத்து இலக்கியச் காட்சிகள் என்ற நூலை எழுதியுள்ளார். அம் மூவனர் பாடிய ஒரு பாடலை (நற். 275) வைத்துக்கொண்டு அவர் உள்ளத்தை நன்கு அலசி எடுத்துக் காட்டி அவர் உணர்வைத் தம் உணர்வால் புலப்படுத்தி நம்மை அவ் வுணர்வு கொண்டு இலக்கிய இன்பத்தில் திளைக்கச் செய் கின்ருர். - "பொதுவாக மற்றவர்கள் கண்டு புறக்கணித்துப் போகின்ற ஒரு சில காட்சியே அம்மூவர்ை என்ற பழம்புலவர் உள்ளத்தில் இத்தனை உணர்ச்சியையும் வளர்த்துள்ளது. நெய்தல், மக்களைப்போல் புண்படு கிறது; படுத்து உறங்குகிறது; விழித்து எழுகின்றது. அது உணரவேண்டிய உணர்வுகளையெல்லாம் அதன் பொருட்டுப் புலவர் உணர்ந்து உருகுகிருர். எல்லாம் அவர் கற்பனைத் திறனுகும்" (ப. 27) என்று தானே அந்த உணர்ச்சியில் மூழ்கித் திளைக்கிரு.ர். இத்தகைய விளக்கங்கள் இந்நூலிலும் பிறவற்றிலும் விரிந்து கிடக்கின்றன. புலவர் கண்ணிர் என்பது சங்கப் பாடல்களுள் ஒரு வகையாக அமைந்த கையறுநிலைப் பாடல்களின் விளக்க மாகும். நல்ல கவிஞர், தம் புரவலர் - மன்னர் - சான்ருேர்செந்தண்மையாளர் மறைய உளமுருகிப் பாடிய புலவர் தம் பாடல்களுள் சிலவற்றின் உணர்ச்சி வயப்பட்ட விளக்கங்களை இந்த நூலில் காணலாம். இதில் தனிப் பட்டவரைப் பற்றியவையும் உண்டு; பொதுவாக அமைந் தவையும் உண்டு.