பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முல்லைத்திணை' என்பது அகத்திணைப் பற்றிய பாடல் களின் விளக்கத்தைப் பற்றிய ஒரு நூலாகும். இதில் முல்லைத்திணையின் இயற்கை வளம் - சூழல் - அமைப்பு - வாழ்க்கை முதலிய அனைத்தும் நன்கு விளக்கப் பெறு கின்றன. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எத்தனையோ சங்க கால முல்லைத் திணைப் பாடல்களின் அடிகளும் அவற்றின் விளக்கங்களும் நம்மை ஆட்கொள்ளுகின்றன. 'முல்லைநிலம் வளமுறப் பரவிக் கிடக்கும் நாடு இது. ஆதலின் நேரில் கண்டறிந்த இயற்கையின் எழிலையும் மக்களின் வாழ்க்கை முறையையுமே பாட் டில் வடித்துள்ளனர். பாட வேண்டும் என்ற மரபுக் காக, தாம் காணுதவற்றைக் கற்பனை செய்து பாட வில்லை. கண்டு உணர்ந்தவற்றிற்கே கலைவடிவம் தந்துள்ளனர்." (ப. 10) என்று இப்பாடல்கள் - முல்லைத்திணைப் பாடல்கள் புலவர் கள் கண்ட வாழ்வையும் அதற்கடிப்படையான இயற்கை யினையும் பின்னிப் பாடியவை என்பதை விளக்குகிரு.ர். இவ்வாறு அமைந்த நூல்களைத் தவிர்த்து வேறு வகைப் பட்ட அரசியல் சார்பான - பிறவகையான நூல்களிலும் இத்தகைய உயரிய சங்கப் பாடல்களைக் காட்டி, சமு தாயம் இழிநிலை எய்தாத வகையில் பண்பட்ட உள்ளமும் பரந்த மனப்பான்மையும் பெற்று உலகம் சிறந்து வாழ வேண்டிய வழிகளைக் காட்டிக்கொண்டே செல்கின் ருர். விருந்துகளும் செல்வங்களும் இன்னும் ஒரே வகையில் அமைந்த நூல்களை மட்டும் இங்கே சுட்டி அமையலாம் என எண்ணுகிறேன். திற ய்ைவு நூல்களே அவை. அவை ஒவ்வொன்றைப் பற்றி யும் ஒவ்வொரு தனிச் சொற்பொழிவே ஆற்றலாம். சங்க இலக்கியத் தொகுப்புகள் அனைத்தையும் துருவித்துருவி ஆய்ந்து அவற்றைச் செல்வமாகவும் விருந்தாகவும் நமக்கு வாரி அளிக்கின்ருர், வரதராசனர். அவை நெடுந் தொகை விருந்து, நற்றிணை விருந்து, குறுந்தொகை