பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆசிரியரிடம் அணுகிப் பாடம் கேட்டுக் கற்கும், பழைய முறை, இன்று எல்லோக்கும் வாய்க்குமானல் இவ்வாறு எளிமைப்படுத்த வேண்டுவதில்லை. ஆயின் இன்றைய நிலை வேறு வகையாக உள்ளது.' (ப. 4) என்று தான் கொண்ட நடையினையும் பிறவற்றையும் விளக்குகிருர். இந்த முறை, இவர் எழுதிய எல்லா நூல் களுக்குமே பொருந்தும். எளிய நடை, பிரித்து எழுதும் முறை-சில வடமொழிச் சொற்களைக்கூட அ ந் த மரபிலேயே சுட்டி நெறி, இன்ன பிறவும் இந்த வகையில் அடங்கும். படைப்பிலக்கியங்களில் பாத்திரங்களின் பேச்சுகளில் சிலவிடங்களில் கொச்சை மொழிகளே பயின்று வருவரும் இக்கருத்திலேயாம். எனவே, இவர் உள்ளக் கருத்து சங்க இலக்கியங்களையும் வாழ்க்கை நெறிகளையும் எல்லாருக்கும் எளிதில் புரிய வைக்க வேண்டும் என்பதே யாகும். இந்த நூல்களைப் பயில்வார்க்கு மற்ருெரு உண்மையும் விளங்கும். இவர் தம்முடைய பெரிய நாவல்களுக்கும் பிற நூல்களுக்கும் சிறுசிறு முன்னுரையோ அன்றி உற்றவர்தம் அறிமுகமோ அமைத்து எழுதியுள்ளனர். ஆயினும் இந்த நூல்களுக்குச் சற்றே விரிந்த முன்னுரைகளை எழுதியே நூல் எழுதத் தொடங்குவது நன்கு புலகுைம். 'குறுந்தொகைச் செல்வம்' என்னும் நூலுக்குப் பனிரெண்டு பக்கம் முன்னுரை எழுதியுள்ளார். இது மட்டு மன்றி, பிற முன்னுரைகளும் கூடத் தனித்த திறய்ைவுக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. "இவற்றில் உள்ள கற்பனைகள் உள்ளது புனைதலே அன்றி, இல்லது புனைதலாகக் கூறப்பட்ட வையல்ல. இவற்றின் உயர்வு நவிற்சிகள் மருட்டி வியப்பூட்டுவன அல்ல; மெல்லக் கற்பனை உலகத்து க்கு ஈர்த்துச் செல்வனவாகும். தலைவனைப் பிரிந்த