பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 களின் (நற்றிணை) உடை எளிமை சான்றது. உடல் அழகுற அமைந்தது; உயிரோ போற்றத்தக்க விழுப் பம் உடையது. உயிரின் வாழ்வுக்காக உடலும், உட லின் காப்புக்காக உடையும் அமைதலாகிய இயற்கை யமைப்பை இப்பாட்டுக்களில் காணலாம்." (ப. 5) 'இல்லது புனைந்துரைத்தலாகிய கற்பனை இவற்றில் இல்லை. உள்ளதைப் புனைந்துரைத்தலும் உள்ளதை ஒழுங்குபடுத்திக் கூறுதலுமே இவற்றில் உள்ளன, ஆகவே, பாட்டுகளின் உடல் எனப் போற்றப்படும் கற்பனை, இவற்றில் அளவுபட அமைந்துள்ளது எனலாம்." (ப. 5) 'எளிய உடை சூழ்ந்த இத்தகைய அழகிய கலையுடம்புகளில் அமைந்துள்ள உணர்ச்சிகள் மாசற்றவை; நெறியானவை; போற்றத்தக்கவை." (ப. 5-6) என்று இந்த நற்றிணைச் செல்வத்திலும் பொதுவாகத் திறனயும் தன்மையினையும் திறனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் உழைப்பையும் உணர்வையும் கூறுகிறர். இந்த நூல்கள் அனைத்துமே இந்தத் திறய்ைவின் அடிப்படையில் எழுதப்பெற்றவையே. எனினும் அளவும் காலமும் கருதி அவற்றின் உள் நான் புகவில்லை. மேலும் இந்நூல்கள் புகாத தமிழ் வீடுகள் கிடையா: படியாத மாணவர் இலர்; போற்ருத புலவர் இல்லை. எனவே இவை பற்றி நான் மறுபடியும் விளக்குவது தேவையற்றதும் கூட. இந்த நூல்களின் முன்னுரைகள் வழியே இவர் காட்டும் திறய்ைவு உண்மைகளையே ஈண்டு நான் சுட்டிக் காட்டினேன். இவ்வாறே இவர் எழுதிய நூல்கள் அனைத் திலும் இவர் காட்டிய திறய்ைவு நெறியே பின்பற்றப் பெறுகிறது என்பதையும் ஒரளவு சுட்டிக் காட்டினேன்.