பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புகழ் என்றும் வாழ்க வாழ்க்கையினைப் பல்வேறு படைப்பு நூல்களாகிய நாவல்களிலும் பிறவற்றிலும் திறய்ைந்து விளக்கி வாழ் வைச் செம்மைப்படுத்த முனைந்த வரதராசனரை நேற்றுக் கண்டோம். திறய்ைவு இன்னதென்பதை இலக்கண மரபில் நின்றும் இலக்கிய நெறிவழியும் விளக்கிக் காட்டித் தாமே அவற்றிற்கு விளக்கமாக நின்ற வரதராசனுரை இன்று கண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவரொடு கலந்து, அவரொடு பழகிய அவருடைய உணர்வுகளில் பங்கு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந் தோம் என்று பெருமை கொள்ளும் நிலையில் நாம் நிற்கிருேம். இவர் புகழ் என்றும் வாழ்க என்று வாழ்த்து கிறேன். இவர் கடைசியாக இருந்து தொண்டாற்றிய இப் பல்கலைக் கழகத்தின் சுவர்களும் கல்லும் மண்ணும் இரும்பும் வாய் இருந்து பேசத் தொடங்கின் இவர் ஒவ்வொன்றையும் எவ்வெவ்வாறு திறய்ைந்தார் என்பதை பேசும். அவை பேசாவிடினும் அவர் விட்டுச் சென்ற அருமைக் கலைப்பெட்டகங்களும் அவரைப் போற்றி அவர் புகழ்பாடும் மாணவர், அறிஞர், அறவோர் குழாங்கள் இங்கே என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கும் என்பது உறுதி. இந்த மு.வ, நினைவுச் சொற்பொழிவுகளை முதன் முதலாக இந்த ஆண்டு நிகழ்த்த என்னை அழைத்த இப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கட்கும், பதிவாளர் அவர்களுக்கும், சிறப்பாகத் தமிழ்த்துறைத் தலைவர் அவர் கட்கும், தமிழ்ப்பேரறிஞர் பிறருக்கும் என் வணக்கத்தை யும் நன்றியையும் கூறி விடைபெற்றுக் கொள்ளுகின்றேன். இரண்டு நாட்களிலும் என் பேச்சினைக் கேட்டுச் சிறப்புச் செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி உரித்தாகுக! வணக்கம்.