பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இவர்தம் நூல்களிலே அவ்விரண்டனுக்கும் உள்ள மாருட் டங்களும் போராட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இலக் கியங்களின் திறன் கண்டு, அவற்றை ஆராய்ந்து எழுதிய கட்டுரைத் தொகுதிகளும், தனி இலக்கிய ஆய்வு நூல் களும் பல இருக்கின்றன. அவை பற்றி நாளை விளக்க மாகக் காணலாம். இன்று, இவர் எழுதிய பிற நூல்களில் இவர் பயின்று மேற்கொண்ட பிறர்தம் நூல்கள், இவர்தம் கொள்கைகள், நெறிகள் முதலியன பற்றியும் அவற்றில் இவர் கொண்ட ஈடுபாடு பற்றியும் ஒரளவு காணலாம். இவர் நாடகங்களும் நாவல்களும் பெற்றுள்ள பாத்திரங் களில் பலர் வாழும் மனிதர்களே! இன்றும் இவர் பாத்திரங் களாகக் கொண்ட மனிதர் சிலர் வாழ்கின்ருர்கள். சில பாத்திரங்களின் பெயர்கள்கூட அப்படியே இருப்பதைக் காணலாம். இவரொடு கலந்து அவ்வப்போது பேசிய காலங்களிலெல்லாம் இவர் கூறிய சில காரணங்களும் பாத்திரங்களின் வாழ்வு நெறிமுறைகளும் நன்கு விளக்கம் பெறுவதறிந்தேன். சில பாத்திரங்களை இவர் எடுத்தாண்ட மைக்கும் காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். 'மு.வ. அவர்கள் இயற்கையிலே கூர்த்த மதியும் எழுத் தாற்றலும் பெற்றவர். என்ருலும், இவர் பயின்ற பல நூலா சிரியர்கள்-இந்திய நாட்டவரும் மேலைநாட்டவரும்இவரை ஆட்கொண்டனர் எனலாம். இவர் முதல் முதல் எழுதியது. செந்தாமரை என்னும் நாவல். அதிலும் கள்ளோ? காவியமோ?, அகல் விளக்கு, மலர்விழி போன்ற நாவல்களிலும் இவர் பாத்திரங்களே பேசுமாறு உள்ள நிலையினைக் காணலாம். இந்த உத்தியை இவர் காண்டேகர் நாவல்களைப் பயின்றே பெற்ருர். இவர் படியாத காண்டே கர்தம் நாவல்களே இல்லை எனலாம். அக்காலத்தில் காண்டேகர் நாவல் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு நல்ல மதிப்பினைப் பெற்றுத் தமிழ்நாட்டில் உலவின. அவை அனைத்தையும் பயின்ற இவர் தாமும் அந்த முறையினைப் பின்பற்றினர். மேலும் காண்டேகர்தம்