பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கருத்துரைக்கும் மரபு, முறை, போக்கு முதலியனவும் இவரை ஆட்கொண்டன. காண்டேகரை நாவல் எழுதுவ தில் தன் வழிகாட்டியாகவே கொண்டார் எனல் மிகை யாகாது. பம்பாய் சென்ற காலத்தில் நேரில் சென்று அவரைக் கண்டு அவரொடு கலந்து பேசியும் வந்துள்ள 'மு. வ. அவர்கள் அச்சந்திப்பால் மிக்க பயன்பெற்ற தாகக் கூறுவர். தமிழ்நாட்டுப் பர்னட்ஷா மு. வ. பர்னட்ஷா நூல்களைப் படித்துத் தமிழ் பர்னட்ஷா ஆனர் என்று திரு. வி. க. அவர்கள் கூறி யுள்ளதை மேலே கண்டோம். பச்சையப்பர் கல்லூரியில் இவர் "பர்னட்ஷா நூல்கள் அனைத்தையும் நூலகத்தில் வாங்கச் செய்து படித்ததோடு, என் போன்ற மற்ற ஆசிரி யர்களையும் மாணவர்களையும் படிக்கச் செய்தார்."ஷா'வின் கருத்தும் போக்கும் இவர் உள்ளத்தைக் கவர்ந்தன. அப்படியே வெல்ஸ் நூல்கள் அனைத்தும் பயின்று அவர் கருத்தையும் போக்கினையும் இவர் கைகொண்டனர். ஆங்கில நாட்டு நல்லறிஞர்தம் இலக்கிய நூல்களையும் நாவல்களையும் நிறையப் பயின்ருர், அவை யாவும் இவர் தம் நூல்களில் ஆங்காங்கே குறிக்கப் பெறுகின்றன. மற்றும் தாம் விரும்பிப் படித்த சமய நூல்கள் பலவற்றை யும் தம் பாத்திரங்கள் கையிலும் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார். தாயுமானவர் பாடல், குறள் போன்ற இவர் உள்ளத்துக்கு இனிய நூல்கள் பாத்திரங்கள் உள்ளத்தை யும் மாற்றியமைக்கும் முறையினைச் சில நாவல்களில் காணலாம். இவ்வாறு இவரை ஆட்கொண்ட இலக்கியங் கள் அனைத்தும் இவர்தம் பாத்திரங்களையும் ஆட்கொண்ட சிறப்பைப் பலவிடங்களில் காண இயலும். மேலைநாட்டு அறிஞர் பலர் போக்கினையும் முறையினை யும் பயின்று இவர் தழுவினர் என்ருலும் அவை பற்றி யெல்லாம் விளக்கின் பெருகும் என அஞ்சி, திரு. வி. க. குறித்த பெர்னட்ஷா"வொடு கொண்ட தொடர்பினை