பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மட்டும் இங்கே சுட்டிக்காட்ட நினைக்கின்றேன். (பிறவும் இவ்வாறே அமையும்). பெர்னட்ஷாவின் நூல்கள் பல வற்றையும் பயின்ற மு.வ. அவர்கள் அவரைப் போன்றே பாத்திரங்களைக் கற்பனை செய்து கொண்டார். பெர்னட் ஷாவைப் பற்றியே ஒரு நூலை எழுதியுள்ளார். அது வெறும் வாழ்க்கை வரலாருக மட்டும் இல்லாமல் ஓர் இலக்கியத் திறய்ைவு நூலாகவே அமைகின்றது. டாக்டர் மு. வ. அவர்கள் ஷாவினைப் பற்றிக் கூறிய சில கருத்துக்களை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டுகிறேன். இவர்தம் நூலில் அக்கருத்துக்களுக்கேற்ப வடிாவின் எழுத்துக்களை எடுத் துக்காட்டிச் செல்லுகின் ருர் என்பது நூல் வழியே செல்வார் நன்கு உணர்வர். டாக்டர் மு. வ. அவர்கள் ஆடம்பரத்தை வெறுப்பவர் என்பதை யாவரும் அறிவர். அதே தலைப்பில் ஷாவினைப் பற்றிய நூலில் அந்த அறிஞரைப் பற்றி இவர் குறப்பிட் டுள்ளார். 'உண்மையாகவே செல்வர்கள் ஆ ட ம் ப ர வாழ்க்கை வாழ்வதனால் அதில் இன்பத்தையோ உடல் நலத்தையோ உரிமையையோ காணமுடியாது என்பது அவர் கருத்து." (அறிஞர் பர்னட்ஷா, ப. 87). "அவருக்குக் கண் போன்ற கொள்கையாகிய கூர் ģ56Dpub (Creative Evolution) #Tulis Duo6Du i sostą-Li படையாகக் கொண்டது. அவர் அடிக்கடி விளக்கும் உயிராற்றல் (Life Force) பெண்ணின் தாய்மை யாகவே வடிவு கொள்கிறது என மதித்து எழுதியுள் ளார். ஆண் பெண போராட்டத்தை விளக்கும் அவர் பெண்ணுக்கே எப்போதும் வெற்றி எனக் காட்டியுள் ளார்.' (ப. 90) 'குடும்ப வாழ்க்கை திருந்த வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு எழுதும் எழுத்துக் களில் புரட்சியோடும் உண்மையும் ஆர்வமும் கலந்து விளங்கக் காண்கிருேம்." (ப. 93)