பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. என்றும் பச்சிலை மருத்துவனுடைய பழங்கால முறையை விட இவர்களுடைய விஞ்ஞான முறை முற்போக்கு அடையவில்லை என்றும் வழக்கமான போக்கில் எழுதியுள்ளார்." (ப. 121) "அவர்தம் ஆயுளைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ள வில்லை. வெளியூருக்குச் சென்று மேற்கொண்ட வேலையை முடித்தவர்கள் அடுத்த வண்டியை எதிர் பார்த்திருப்பது போல் அவர் கவலையற்றவரா யிருந்தார்." (ப. 128) 'உஷா வறுமையில் வளர்ந்தார். ஆனல் செல்வராய் இறந்தார்." (ப. 137) 'அஞ்சாமை, கவலை.இன்மை, கலைஉணர்வு, அறி வின் தெளிவு இவை ஷாவின் வாழ்க்கை." (ப. 139) மேலே காட்டியவை அனைத்தும் அறிஞர் பர்னட்ஷாவைப் பற்றி டாக்டர் மு.வ. அவர்கள் எழுதியவை. இவர்தம் நூல்களைப் பயின்றவர்களும் உடன் இருந்து வாழ்ந்த வர்களும் இந்த ஷாவின் வாழ்க்கையும் எழுத்தும் மு.வ. வின் வாழ்விலும் எழுத்திலும் எப்படிப் பிரதிபலித்தன. என்பதை அறிவர் என மட்டும் இங்கே சுட்டிக்காட்டி மேலே செல்கிறேன். ஷா மேற்கொண்ட சில நெறிகளை மு.வ. அவர் களும் கொண்டமைக்கு இரண்டொரு சான்றுகளையும் காணல் வேண்டும். இவர்களை இணைத்து எழுதிய தனிநாயக அடிகளார் தமிழாசிரியராகிய மு.வ. நாடகாசிரியராகிய ஷாவை விடச் சில வகைகளில் மேம்பட்டவர் எனக் குறித்துள்ளமையும் ஈண்டு எண்ணத்தக்கது.(தமிழ் கல்சர் 10, இதழ் 2, 1963 ப. 8) ஷாவினைப் போன்றே மு.வ. அவர்களும் தாம் கொண்ட கொள்கைகளையும் கருத்துகளையும் பாத்திரங்கள் வாயிலாக உபதேசம் செய்கின்றர் என்பது இருவர்