பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 "அவர்தம் வாழ்க்கை திருக்குறளின் அறத்துப் பாலுக்கு ஒரு விளக்கம் எனலாம். அவ்வாழ்க்கையில் பாயிரம் உண்டு. இல்லறம் உண்டு; துறவறம் உண்டு. ஊழ்வலியும் உண்டு. இல்லறத்தின் சிறப்பை உணர்ந்தவர். துறவறத்தில் தூய்மை பெற்றவர். அன்பு அருளாய்க் கனிந்த வாழ்வு அவர்தம் வாழ்வு எனச் சுருங்கக் கூறலாம்." (திரு.வி.க. ப. 6-7) என்று திரு.வி.க. வின் வாழ்வினைத் தெளிவாகக் காட்டி யுள்ளார் மு.வ. இவரே அவர் மொழி நடையைப் பற்றிக் கூறிய ஒரு கருத்தை இங்கே காட்ட நினைக்கிறேன். 'திரு.வி.க. வின் நடையில் செந்தமிழ்ச் சொற்கள் அழகாகப் பயின்று வரும். பத்திரிகைக்கு உரிய நடை என்று அவரே குறிப்பிட்ட போதிலும் மற்றப் பத்திரிகைகளின் நடைக்கும் அவருடைய தேச பக்தன்-நவசக்தி பத்திரிகைத் தமிழ் நடைக்கும் பெரிய வேறுபாடு இருந்தது ... இலக்கியத்தில் பயின்ற செஞ் சொற்களை இயல்பாக எடுத்தாளும் திறன் அவரிடம் என்றும் காணப்பட்டு வந்தது." (ப. 80) "அவருடைய எழுத்திலும் பேச்சுமுறையே செல்வாக்குப் பெற்று விளங்கியது. நவசக்தியில் எழுதும் தலையங்கமேயானலும், தனியே எழுதும் நூலின் பகுதியே ஆலுைம், சொற்பொழிவின் போக்கில் அவருடைய நடை அமைந்துவிடும்.” (ப. 81) "இயற்கையே அவர்க்கு ஒரு பல்கலைக் கழகமாகத் தோன்றியது. அக்கழகத்தில் பயின்ற மாணவன் யான் என்று தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு மகிழ்ந்தவர் அவர். அவ்வகையில் அவர் எழுதிய எழுத்துக்கள். பாடிய பாட்டுக்கள் பலப்பல. (ப. 150) எனவும் இன்னும் பல வகையிலும் திரு.வி.க. வுடன் பழகியும் அவர் தம் நூல்களைப் படித்தும் மு.வ. அவர்கள்