பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கிய வாழ்வைத் திறய்ைந்து எழுதிய எழுத்துக்கள் பல. இவர்களைப் பற்றி மட்டுமன்றிக் காந்தி அண்ணல், கவிஞர் தாகூர் ஆகிய நூல்கள் இரண்டிலும் அந்த இரு பெரியவர்களைப் பற்றி எழுதிய கருத்துக்கள் எத்தனையோ என்முன் நிழலிடுகின்றன. ஒன்றிரண்டு கண்டு மேலே செல்லலாம். தாகூரின் படைப்புக்களைப் பற்றிக் கூறிய கருத்துகளுள் ஒரு சில: "அவருடைய சிறுகதைகள் சுவை மிகுந்த கதைகள். காபூலிவாலா முதலான பல கதைகளும் படிப்பவரின் உள்ளத்தைக் கவரும் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றன. அவற்றில் அவருடைய நகைச் சுவையும் வேடிக்கையுணர்வும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பண்பை விளக்கி ஆசிரியரின் உள்ளத்தைப் புலப்படுத்துகின்றன. தாகூர் தம் வாழ்க்கையில் கண்டும் கேட்டும் அறிந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இத்தகைய உணர்வுமிக்க கதைகள் பல எழுதி யுதவினர். அவைகள் இன்று இலக்கிய மணிகளாகத் திகழ்கின்றன. (தாகூர் ப. 57) "தாகூரின் கற்பனைவளம் உலகத்து அறிஞர் எல்லாரும் போற்றத் தக்க பெருமை உடையது. உயர்வு நவிற்சி மிகுதி இல்லாமல், கண்டும் கேட்டும் தாம் உணர்ந்தவற்றைக்கற்பவரின்மனக்கண்ணிற்குக் காட்டவல்ல கற்பனைச் சொல்லோவியங்களை அவருடைய பாடல்களில் மட்டுமல்லாமல் கடிதங் களிலும் காணலாம்." (ப. 62) இவ்வாறே தாகூரின் பிற சிறப்பியல்புகளையும் வாழ்க்கை நெறி முறைகளையும் நூல் முழுதும் காட்டிக் கொண்டே செல்கிருர். இவற்றை இவர்தம் எழுத்துக்கும் சாற்றலாம் என்பதைக் கற்றவர் அறிவர். இப்படியே அண்ணல் காந்தி அடிகளாரைப் பற்றி எழுதிய நூலிலும் பல வாழ்விலக்கியக் கோடுகளைச் சுட்டிக் காட்டலாம். முன்னுரையிலேயே மு.வ. அவர்கள்,