பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 'அண்ணலைப் புகழ்வோர் பலர்; போற்றுவோர் பலர்; வழிபடுவோர் பலர். ஆயினும், அவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர்; அவற்றை உள்ளவாறு உணர்வோர் மிகச்சிலர், உணர்ந்து பயன்படுத்துவோர் மிகச்சிலரே. அவ ருடைய வாழ்க்கை, படைப்பின் சட்டங்களை ஒட்டி இயங்கிய தூயவாழ்க்கை; ஆகையால் அது எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்வாழ்க் கையாகும்" என்று தாம் இந்த நூல் எழுதிய நோக்கத்தையும் குறிப் பிட்டு, உள்ளே காந்தி அடிகளாரின் உயர்ந்த வாழ்க்கைப் பண்புகள் பலவற்றையும் விளக்கிக் காட்டியுள்ளார். காந்தியடிகள் மூளையையும் அளவு கடந்து வளர்க்க விரும்பவில்லை. ...அறிவுப் பசியையும் எல்லை கடந்து போகாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. தேவை இல்லாத அறிவை மூளையில் திணித்து வைத்துக் கொண்டிருப்பது நல்வாழ்வுக்குக் கெடுதி என அவர் எழுதியுள்ளார். இந்தக் காலத்துக் கல்வி முறையை அவர் கடிந்ததற்கும் அடிப்படைக் காரணம் இது தான்.' (காந்தி அண்ணல், ப. 18-19) 'அண்டை அயலாருக்கு இல்லாத இன்பங்களை நுகர்வது பாவம் என்று நீதி தர்மத்தில் அவர் எழுதி யிருக்கிருர். இந்த உணர்வுதான் அவர் வாழ்க்கையை மிகமிக எளிய நிலைக்குக் கொண்டு போய்விட்டது... முழங்கால் வரையில் அணிந்த வறுமைக்கோலம் அன்று முதல்தான் அவருடைய தவக் கோலமாக விளங்கத் தொடங்கியது." (ப. 43) காந்தி அடிகளிடம் எதையும் அளந்து பார்க்க இரண்டு அளவு கருவிகள் இருந்தன-உண்மை ஒன்று இன்ன செய்யாமை மற்றென்று." (ப. 70) 2