பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இவ்வாறு நூல் முழுதும் காந்தி அடிகளாரின் பண்பினைப் பாடியுள்ளார். இத்தகைய நல்ல பண்பாளர் தம் நூல்களும் வாழ்க்கை முறைகளும் பிற நல்லியல்புகளுமே வழி காட்டிட, டாக்டர் மு.வ. அவர்களும் நேரிய வாழ்வில் வாழ்ந்து, வாழ்க்கை இலக்கியத்தையே திறய்ைந்து, நமக்கும் நல்ல பல இலக்கியங்களைத் தந்துள்ளார். இனி அவர்தம் நூல்களுள் பிறவற்றைக் காணலாம். நாவல்களும் பாத்திரங்களும் தாம் வாழ்ந்த வாழ்வின் சூழலை ஒட்டியும் ஊர்கள்-பிற சார்புகளை ஒட்டியும் தம் நாவல்களை மு. வ, எழுதியுள்ளார் என முன்னரே சுட்டியுள்ளேன். இவர்தம் நாவல்களில் வரும் சில பாத்திரங்களும் இவர் சந்தித்தவர்களாக உள்ள னர். மேலும் அந்நாவல்களில் உலகநிலை, இந்திய நாட்டு நிலை, தமிழ்நாட்டு நிலை, தமிழர் நிலை ஆகியவற்றையும் தம் பாத்திரங்கள் வாயிலாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த அடிப்படையில் இவர் வாழ்விலக்கியத்தை ஆய்ந்த வகை யினைச் சிறிது காண்போம். இவர் வாழ்ந்த நாடும் சுற்றுச் சார்புமே இவர்தம் வாழ்விலக்கியங்களாகிய நாவல்களை உருவாக்கின எனலாம். முறை, மரபு முதலிய நெறிமுறைகளை இவர் நாம் மேலே கண்டபடி ஷா, காண்டேகர் போன்ற பிறமொழி ஆசிரியர்களைப் பின்பற்றிலுைம், கதைகளின் அமைப்பு போக்கு, நிகழ்ச்சி முதலியவற்றைத் தம்மைச் சார்ந்த சுற். றுப்புற நிலையிலேயே ஆக்கிக் கொண்டுள்ளார். மேலும் அந்த நாவல்களில் தாம் விரும்பிப் பயின்ற நூல்களைப் போற்றும் பாத்திரங்களைப் படைப்பதோடு அவற்றின் வழித் தாம் கொண்ட கொள்கைகளைப் பற்றியும் விளங்க வைக்கிறர். இவர் அந்த நாவல்கள் இத்தகைய கொள்கை களைப் பரப்புவதற்கெனவே அமைந்தவையாதலால் அவ் வாறு எழுதினேன்' என்று சொல்லுவர். பேதி மருந்தினை வெல்ல உருண்டைக்குள் வைத்துக் கொடுத்து அதை உண்ணவைத்து, உடல் மாசு நீக்குவது போன்று, அறக்