பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. நான் அந்த நெறியை நோக்குகிறேன்" என்று அரு ளப்பனைப் பேசவைக்கிருர். சங்க கால இலக்கியங்களைக் காட்டுவது மட்டுமன்றி அதில் வரும் வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும்கூடச் சுட்டிச் செல்லும் மரபு இவருடையது. ஒன்றுமட்டும் இங்கே காட்டலாம் என நினைக்கிறேன். 'பாவையில் பாவை--பழனியின் காதல் வாழ்வில் இரவுக்குறி, இரவுக் குறி இடையீடு இவைகளைப் பயிலின் நாம் சங்க இலக்கியத்துக்கே செல்வோம். "இப்படியே இருவரும் பேசிக்கொண்டிருந்து அமைதியானர்கள். வேலுப்பிள்ளை உறங்கிவிட்டார். மனைவி உறங்கவில்லை. இவர்கள் பேசும்போது பாவை உறங்காமல் கண்ணை மூடிக்கொண்டே எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் அமைதியாக இருக்கவே, இருவரும் அயர்ந்து உறங்குவதாக எண்ணிக் கண்ணைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனத் தோட்டத்தில் வேப்பமரத்தில் தூங்கும் காக்கைகள் கலைந்து ‘கா கா எனக் கரைந்தன. அது பாவையும் பழனியும் செய்த ஏற்பாடு. தான் வருவ தைப் பாவைக்குத் தெரியப்படுத்த வேண்டி, பழனி அந்த மரத்தின் மேல் சிறுகல் எறிந்து காக்கைகளைக் கலைப்பது வழக்கம். இதைப் பாவை உணர்ந்து செல் வது உண்டு. அன்று இரவு பாவை அந்தக் காக்கை யின் ஒலியைக கேட்டதும் தாய் உறங்குவதை அறிய முயன்ருள். 'அம்மா, அம்மா’ என்று மெல்லிய குரலில் அழைத்தாள். 'ஏன் அம்மா பாவை’ என்ருள் தாய். பாவை மனம் உருகினள். பழனி வந்து காத் திருந்து செல்வாரே! அம்மாவோ உறங்கவில்லையே’