பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 என்று வருந்தினள். 'ஏன் அம்மா கூப்பிட்டாய்? என்று மறுபடியும் தாய் கேட்டாள். ஏதோ கனவு கண்டு விழித்துக் கொண்டேன்' என்று பொய் சொன் ள்ை. இன்னும் சின்னக் குழந்தையாகவே இரு. வயது ஆகியும் பெரியவள் ஆகவில்லை என்று சொல்லிக் கொண்டே அன்னை உறங்கிவிட்டார், ஆயினும் பாவை உறங்கவில்லை. அவளுடைய மனம் பழனியின் ஏமாற்றத்தை நினைத்து வாடியது. இது அவளுடைய கவலையைப் பெருக்கிய நாளாகும்." (பாவை.ப. 33-34) என்று சங்க கால இலக்கியங்களில் வரும் இரவுக்குறி, இரவுக்குறி இடையீடு முதலியவற்றை விளக்கிக் காட்டிய தோடு, இத்தகைய காதல் ஒழுக்கநெறி காலம் கடந்து இன்றும் என்றும் வாழும் என்ற உண்மையினையும் மு. வ. அவர்கள் உணர்த்தத் தவறவில்லை. இத்தகைய சங்க இலக்கியத்தைத் திறய்ைந்து அவற்றை வாழ்வொடு பிணைக்கும் இடங்கள் இவர்தம் நாவல்களிலும் சிறுகதை முதலியவற்றிலும் பலப்பலவாகும். எனினும் அளவு கருதி இந்த அளவொடு இத்தலைப்பினை அறுதியிட்டு அடுத்து இவர் நாவல்களில் காட்டும் சமுதாயச் சீர்திருத்த வாழ்வு நெறி பற்றிய இவர்தம் கொள்கைகளை ஒரளவு தொட்டுக் காணலாம். சீர்திருத்தங்கள் இவர் வாழ்க்கையின் மூடநம்பிக்கைகளைச் சாடி வெறுக்காத நூலில்லை என்று சொல்லலாம். வாயிற் படிக்குக் குங்குமம் வைப்பது முதல் வீட்டுக்கொரு சமையல் இருப்பதுவரை அமைந்த வீட்டுச் சீர்திருத்தங் கள் இவர் பலவிடங்களில் சுட்டிக்காட்டி சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய இன்றியமையா நிலையைச் சுட்டி விளக்குவார். "இந்த வாயிற்படியில் வீணுக்குச் செலவாகும் குங்குமம் முதல் அங்கே உலர்ந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரப் பட்டுப்புடைவை வரையில் எல்லாம் 3