பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 (செ. பக். 65-66-இது மருதப்பன் வாக்காக வருவதானுலும் மு. வ. அவர்கள் சென்னை வாழ்க்கை மேற்கொண்ட முதல் நாட்களில் பெற்ற அனுபவமேயாகும்.) "வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லையானல் கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? அரசியல் அமைப்பின் குற்றமே ஒழிய சிலரின் குற்றமல்ல.இவ் உல கத்தின் குற்றமே தவிர, துன்பத்துக்கு உள்ளானவரின் குற்றமல்ல." (செந். பக். 81-82) "பணத்தின் எல்லை சட்டம் செய்வதும் சாட்சி தேடுவ தும்; காதலின் எல்லை சேர்ந்து வாழ்வதும் பிரிந்து சாவதும் தவிர வேறுண்டா? (செந். ப. 144) "மூட்டை சுமப்பது ஏழைகளின் தொழில் என்றும் அவர்களைச் சுமக்க வைப்பது பணக்காரர்களின் கடமை என்றும் உலகத்தில் ஏற்பட்டிருக்கிறது.' (கள்ளோ. ப. 7) "சமுதாயக் கட்டுப்பாடு உண்மையான காதலைக் கட்டுப்படுத்த முடியாது.' (கள்ளோ, ப. 34) "இந்தக் காலத்தில் அறிவும் ஆராய்ச்சியும் தொத்து நோய் போல் வீடுதோறும் பரவுகின்றன. அவை இருக்க வேண்டிய இடம் வேறே; செலுத்தவேண்டிய செங்கோல் வேறே. அவற்றிற்கு இவ்வாழ்க்கையில் இடம் கொடுக் கிருர்கள். அன்பைத் துரத்திவிட்டு அறிவை வாழவிடுகிருர் கள். அன்பு பிணைப்பது, அறிவு பிரிப்பது, பகுப்பது, பிரிப் பது; இதுதானே அறிவு? பகுத்தறிவு என்றுதானே பெயரும்.' (கள்ளோ, பக். 89) "நாட்டுப்புறத்துப் பசுக்களின் பால் எல்லாம் அந்தக் குழந்தைகளுக்கு உதவாமல் நகரங்களின் காப்பி விடுதி களுக்கு உதவுகின்ற நிலை நினைவுக்கு வந்தது.' (கள்ளோ, பக். 57) "ஆயிரக்கணக்கான ரூபாய், மிகப்பல நகைகள், ஆடம்பரமான செலவுகள் எல்லாம் சமுதாயத்தில் சிலருக்கே.' (கள்ளோ, பக். 65)