பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 "தமிழர்கள் ஒரு பற்றும் இல்லாதவர்கள். தங் களைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. இந் தியாவின் பழைய நாகரிகம் அவர்களுடையதுதான். ஆல்ை இப்போது இந்தியாவில் ஏழைகள் அவர்கள் தான். நல்ல எண்ணம் இருக்கிறது. ஆனல் சொந்தக் கடமையை மறந்து விடுகிருர்கள் அதனுல்தான் தாழ்ந்துவிட்டார்கள்.” (கள்ளோ. ப. 165) "வெளிநாட்டு உடைக்கும் வெளிநாட்டுப் பேச் சுக்கும் தமிழ்நாட்டில் மதிப்பு மிகுதி.' (கள்ளோ. ப. 168) 'வெறும் தமிழரைப் போல் உணர்ச்சியை முன்னே கொட்டிவிட்டுக் காரியத்தைக் கெடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல அந்த அம்மா” (மலர். ப. 81) இந்தி மொழியும் திராவிட மொழிகளுள் ஒன்று என்பது இவர் எண்ணம். அதற்குரிய ஆதாரங்களும் பல காட்டு வர். எனவே இவர் இந் நாவலில் இது பற்றியும் குறிப்பிடு கின்ருர். "இந்தி மொழியும் இப்படித்தான். அதுவும் தமிழ்ப்பெண்தான். திராவிடப் பேச்சு மொழிகளுள் ஒன்றுதான். ஆல்ை வேறே உடை அணிந்து கொண்டு உங்களிடம் வாழ்கிறது. சமஸ்கிருதம், அரபி முதலானவற்றில் சொற்களைப் பெற்று வேறு மொழி போல் வாழ்கின்றது. நீங்கள் அதை ஐரோப் பிய மொழிகளோடு சேர்த்து எண்ணுகிறீர்கள். உண்மை தெரிந்து கொள்வதற்கு ஒரு காலம் வரும்' என்று மொழி மாநாட்டிற்குக் கலந்துகொள்ளச் சென்ற பெராசிரியர் அருளப்பன் வாயிலாக இந்த உண் மையைச் சொல்லுகிறர். இவரே அலிகாரில் நடந்த அனைத் திந்திய மொழி மாநாட்டில் இக்கருத்தினைப் பல வடநாட் டுப் பேராசிரியர்களிடம் வலியுறுத்திப் பேசிய நிலையினை அம் மாநாட்டிற் கலந்து கொள்ளச் சென்ற நானும் கேட் டுள்ளேன். இதன் வழியே இவர் இந்திய மொழிகள்