பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 "உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக் கிருர்கள். ஆலுைம் ஆங்கில மோகம் இப்படி இருக் கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயை "டியர் மதர்' என்று அழைத்தால் நன்ருயிருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும் போதும் சார், என்று சொல்ல மாட்டோம். எங்கள் தாய்மொழியில் ஜி' என்றுதான் சொல்வோம். எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள். பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடுமிடம், உணவுக்கடை எங்கே வேண்டு மாலுைம் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜி. ஜி. என்றுதான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படிக் கெடுக்கிறீர்களே?" (அகல். ப. 352) என்று சொல்லி வருத்தப்பட்டதாகக் கூறி, தன் உள்ளக் குமுறலையும் வருத்தத்தையும் வெளிகாட்டி இனியாவது தமிழர் திருந்துவார்களா என எண்ணி எங்குகிருர் மு. வ. தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பதே இவர் விருப்பம். இதைப் பல மேடை களில் சொல்லியும் எழுத்தில் வடித்தும் வந்துள்ளார். வாய்ப்புள்ளபோது அரசியலில் மேல் மட்டத்திலே உள்ள வர்களிடமும் வற்புறுத்தியும் வந்துள்ளார். தமிழ், தமிழ் மொழி, தமிழே பயிற்றுமொழி என்று மேடையில் விண்ணதிர முழங்கும் சில பெரியவர்கள்கூடத் தத்தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்பில் சேர்க்க முயல்வதைக் கண்டு கண்ணிர் வடித்துள்ளார். பச்சை யப்பர் கல்லூரியில் அத்தகைய பெரியவர்தம் கடிதங் களைக் காணும்போது வருந்துவார். தற்போதுள்ள இன்றைய கல்லூரி முதல்வர் அவர்களும் அத்தகைய கடிதங்களை என்னிடம் காட்டித் தலைவர்கள் தம் போக்கை எள்ளி நகையாடுவதுண்டு. பயிற்றுமொழி பற்றி மு. வ. கூறுவதைக் கேளுங்கள்: