பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ர்ை என்று காட்டி இந்தப் பகுதியை முடிக்கலாம் என எண்ணுகிறேன். நான் முன்னரே சில இடங்களில் இவர்தம் ஊர், வீடு இவற்றின் சுற்றுச் சார்புகளையும் அவற்றின் இயற்கையெழிலையும் அவற்றில் வாழும் பறவை முதலிய வற்றையும் பற்றிச் சுட்டியதைக் குறித்துக் காட்டியுள் ளேன். எனினும் இங்கே அவற்றுள் சிலவற்றைத் தொகுத் துக் காட்டி, அவற்றில் இவர் எப்படித் தம்மைப் பறி கொடுத்து நின்ருர் என்பதையும் அவற்றின் வழி உலகுக்கு எப்படி எப்படி நீதி புகட்டி நிலைத்த இலக்கியங்களை வாழ வைத்தார் என்பதையும் காணல் நலமாகும். முதல் நாவலாகிய செந்தாமரையின் தொடக்கத்தி லேயே இவர் கிளிகளையும் முருங்கை மரத்தையும் படித்த வர்க்கு முன்னிறுத்திப் பின் கதையைத் தொடங்கியதறிந் தோம். அப்படியே முருங்கையும் தென்னையும் உவமை யாக்கப்பட்டதையும் அறிந்தோம். இவருக்குப் பிடித்த மான இடம் பெங்களுர். அதிலும் அங்கே உள்ள பெரிய பூங்கா இவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாகும். அவற்றின் ஈடுபாடே இவர் பெங்களுரில் சொந்தமாக ஓர் இடத்தை வாங்கச் செய்தது. பல்கலைக் கழகத் துணை வேந்தர் நிலையிலிருந்து ஒய்வு பெற்றபின் இவர் பெங்க ளுரில் சென்று தங்கிக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் எழுதாக எண்ணக் குவியல்களையெல்லாம் எழுதி வெளி யிட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என எண்ணினர். ஆனல் அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை. தற்போது அந்த வீடுகளும் விற்கப் பெற்றுவிட்டன. மு.வ. அவர்கள் பெங்களுர் லால்பாக்கினைப் பற்றித் தம் கள்ளோ? காவி யமோ? என்ற நூலில் ஆறு பக்கங்கள் (61-66) எழுதி விளக்கியதோடு, அதனெடு வாழ்வையும் அங்காங்கே தொடர்பு படுத்திக் காட்டிய திறனும் வியக்கத்தக்கதாகும். 'அந்தச் (சிறு) செடிகளையும் கண்டு அவற்றை அடுத்து மிகமிக உயரமாக வளர்ந்திருந்த மரங்களை யும் கண்டேன். என்னைப் போன்ற (மங்கை) ஏழைப்