பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 இவர் எழுதிய பிற நாவல்களாகிய அல்லி, பெற்றமனம், கரித்துண்டு, அந்தநாள், கயமை, நெஞ்சில் ஒரு முள், வாடா மலர் போன்றவற்றிலும் இத்தகைய வாழ்விலக் கியக் கருத்துக்கள் பலப்பல உள்ளன. அப்படியே இவ ருடைய சிறுகதைத் தொகுப்புகளாகிய விடுதலையா, 'குறட்டை ஒலி என்ற இரண்டிலும் இவர் கண்ட, அனு பவித்த செய்திகளே முக்கியமாக இடம் பெற்றுள்ளன. இவற்றுள் 'விடுதலையா என்ற நூலில் வரும் பல கட்டுரை கள் அன்று நான் வெளியிட்ட தமிழ்க்கலை என்ற திங்கள் இதழில் தொடர்ந்து வெளிவந்தவையாகும். இவ்வாறே அவர்கள் எழுதிய கி.பி. 2000, பழியும் பாவமும் என்பன மக்கள் உள்ளத்தில் எதிர்காலத்தைப் பற்றிய எண்ண அலைகளைத் தோற்றுவித்து வருங்காலம் எப்படி இருக்கும் என எண்ணச் செய்வனவாகும். "பழியும் பாவமும்' என்பது கள்ளால் விளையும் தீமை யினை, ஏழைக் குடும்பங்களின் துழ்நிலையில் விளக்கி, என்னென்ன வகைகளில் அவர்களைக் கெட்டொழிக் கின்றது என்பதை நன்கு சித்திரிக்கிறது. எனவேதான், 'உண்ணற்க கள்ளை' என்ற வள்ளுவர் வாக்கை முதலாக வைத்து முன்னுரையைத் தொடங்கி நூலுள் நுழைகிருர். சிறுகதையும் நாடகமும் இவர் எழுதியுள்ள நாடகங்களும் வாழ்வியல் அடிப் படையில் அமைந்தனவேயாம். இவற்றுட் சில சிலவிடங் களில் நடிக்கப் பெற்றும் உள்ளன. நாடக அமைப்பின் திறன் அறிந்து அவற்றை இவர் ஆக்கியிருக்கிருர் என்பது எண்ணத் தக்கது. பர்னட்ஷாவின் நாடகங்கள் பல வற்றைப் பயின்ற இவருக்கு அவைபோன்ற நாடகங்கள் இன்னும் பல எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் இருந்திருப்பாராயின் இம்மதுரையை நிலைக்கள கைக் கொண்ட ஒரிரு நாடகங் களும் நாவல்களும் நிச்சயம் உருவாகி உலகில் நடமாடிக் கொண்டிருக்கும். ஆனல் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.