பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இவர்தம் சிறுகதைத் தொகுப்புகளும் குறுநாவல்களும் நாடகங்களும் இவருடைய நாவல்கள் பெற்ற இடத்தை மக்கள் உள்ளத்தில் பெற முடியவில்லை. மக்களால் அதிக மாகப் போற்றப் பெற்ற இவர்தம் நூல்கள் நாவல்களே அடுத்து மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் அமைந்த நூல்கள் அறிஞர்களால் நன்கு போற்றப் பெற்றன. 'தம்பிக்கு தங்கைக்கு போன்ற கடித இலக்கியங்கள் இளைஞர் உள்ளங்களைப் பற்றின. எனினும் நாடகங்களும் சிறுகதைகளும் அவ்வளவாகப் போற்றப் பெறவில்லை என்பது கண்கூடு. எனினும் 'விடுதலையா' என்ற சிறு கதையில் இவர்தம் இளமை வாழ்வையே சித்திரித்துக் காட்டுகிரு.ர். 'விடுதலையா என்ற நூலின் முதல் கதை இது. இக் கதையும் வேறு சில கதைகளும் சேர்ந்த தொகுதியே இச் சிறு நூல். இந்த விடுதலையா' என்ற கதையில் தம் இயற் பெயர் திருவேங்கடம் என்பதையும், தாய் அம்மாக் கண்ணு என்பதையும் தம்மை உயிர்கொடுத்து வளர்த்த பாட்டி நரசம்மா என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இவருக்கு நாயக்கன் பட்டியான்' என்ற பெயர்கொடுத்த அந்த இளமை நிகழ்ச்சி உண்மையே என்பதை இவர் கூறியுள்ளார். எனினும் கதைப்போக்குக்கு இது ஒரு கதை. இந்தக் கதையை என்மேல் ஏற்றிச் சொல்லு வார்கள் என்னுடைய பாட்டியாரும் அன்னையாரும் (வீடு. ப. 25) என்று இவர் மேல் போக்காக குறித்துள்ளார். ஆயினும் பத்தாம் வகுப்பின் நிகழ்ச்சியைக் கூறும்போதும் (ப. 30), கடைசியாகப் பாட்டியின் நிலை அறியா பேச்சைக் குறிக்கும் போதும் (ப. 51.) இந் நிகழ்ச்சிகள் உண்மை என்பது வெளியாகிறது. தம்மை ஒடிப்போன பையன் என்றபோது இவர் உள்ளம் பட்ட பாட்டை இவரே குறிக்கிறர். அத்துடன் இவருக்கு உடன்பிறந்தவர்கள், பெற்றேர், பாட்டி ஆகியவரைப் பற்றியெல்லாம் இதில் சுட்டுகிருர். பாட்டியின் உள்ளத்தை இவர் சுட்டும்போது நமக்கெல்லாம் நெஞ்சம் நெகிழ்கிறது. என்னைப் பொறுத்த