பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வரையில் என்னை இளமையில் வளர்த்த தாய்வழி பாட்டி யாகிய (தாய்க்கு அத்தை) காமாட்சி அம்மாளுடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. என் இளமையின் நினைவுகள் என்ற நூலில் இவர்களைப்பற்றிக் குறித்துள் ளேன். மு. வ. அவர்கள் தம் பாட்டியின் பாசத்தையும் பரிவையும் சுட்டிக்காட்டியதோடு, தாம் அப் பாட்டியிடம் கொண்ட பரிவினைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறர். பாட்டியார் பயித்தியம் பிடித்த நிலையில் இருந்தபோது இவர் வருந்திக் கூறிய சொற்கள் இவர் உள்ளத்தைக் காட்டுவன: 'பாட்டியார் இப்போது பயித்தியம் பிடித்துத் தன்னையும் என்னையும் மறந்திருக்கிருர். என்னை அன் போடு பார்த்த கண்கள் இப்போது எதையோ சுற்றிச் சுற்றிப் பார்த்து மருள்கின்றன. எனக்காக அன்பு கொண்டு சோறும் காயும் அள்ளியிட்ட கைகள் இப்போது கண்ட இடத்திலெல்லாம் மண்ணும் கல்லும் அள்ளுகின்றன. அன்பு மிகுதியால் இன் குரல் கொண்டு கசிந்து, திருவேங்கடம் திருவேங் கடம்’ என்று அழைத்த வாய், இப்போது பொரு ளற்ற சொற்களைப் பெருக்கி எவ்வெவற்றையோ சொல்லிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பேச் சைக் கேட்டும் செயலைக் கண்டும் மகிழ்ந்த மனம் இப்போது எதலுைம் மகிழவில்லை; எதலுைம் அமைதி பெறவில்லை; எதையாவது எண்ணுகிறதோ, அல்லது எண்ணம் என்பது இல்லையோ, (ப. 35) இவ்வாறு தம்மை மறந்து படைப்பிலக்கியங்கள் படைத்த பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் தம் சுற்றுச் சார்பு களையும் சமுதாயத்தையும் மறக்காமல், தமிழ்ச் சமுதாய மும் பாரத சமுதாயமும் உலக மக்களினமும் பண்பா டுற்று வாழ வேண்டிய வழிநெறிகளைக் காட்டி வையத்தை வாழ வைத்துள்ளார் எனக் கூறி இன்றைய பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்!