பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் நாள் சொற்பொழிவு (1-2 78) தமிழ் தமிழ் மொழியினையும் தமிழர் நலனையும் தமிழ் இலக் கியத்தையும் எந்த வகையிலும் போற்றியும் காக்கவும் துணிந்த மு. வ. இவற்றின் உயர் சிறப்புக்களையும் பிற மேன்மைகளையும் பண்புகளையும் எடுத்துக்காட்டத் தவற வில்லை. நேற்று நாம் கண்ட எல்லா நூல்களிலும் இவை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. எனினும் இவை பற்றி-தனி நூல்களே இவர் எழுதியுள்ளமை பற்றி-சிறப் பாக மொழி-திறய்ைவு முறைபற்றி இன்று காணலாம் என எண்ணுகிறேன். நாட்டுப்பற்று,மொழியியற் கட்டுரை கள், மொழிப்பற்று, மொழியின் கதை முதலியவற்றுள் இவர் நம் மொழியும் நாடும் வாழவேண்டிய வகைகளை விளக்குவதோடு அவை எந்தெந்த வகையில் ஏற்றம் பெற்றுள்ளன எனவும் விளக்கிக் காட்டுகிறர். இவற்றுள் சில கருத்துக்கள் சிலருக்கு வியப்பாகவும் இருக்கும். 'இந்தி தமிழ்க் குடும்பமே என்ற கருத்தினை இவர் கூறியுள் ளதை முன் கள்ளோ காவியமோ என்ற நூல்வழிச் சுட்டிக் காட்டியுள்ளேன். (ப. 147) இக்கருத்தை இவர் மேலும் வற்புறுத்துவதைக் காணலாம். 'இந்தியின் தாய்' என்ற கட்டுரையில் இந்தியின் தாய் திராவிட மொழியே-தமிழே என்று நிறுவப் பல காரணங் களை மு. வ. அவர்கள் காட்டியுள்ளார். (மொ. க., ப. 11-17) "இந்தியில் உள்ள எழுத்துக்கள் ட (t)' ட (d), ன, ள என்பவை திராவிட மொழிக்குரியனவே.” (ப. 15)