பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 'வினைச்சொல்லாக்கம் முதலான இலக்கணங்களி லும் இந்தி முதலிய மொழிகள் திராவிட மொழியைப் பின்பற்றி அமைந்துள்ளன." (ப. 16) "வாக்கிய அமைப்பில் வடநாட்டு மொழிகளெல் லாம் திராவிட மொழியினின்றும் வேறுபடவில்லை.” (ப. 17) 'இந்தி முதலிய மொழிகள் வடசொற் பெருக்கம் உடையனவேனும், அவற்றின் அமைப்புக்குக் காரணமான தாய்மொழி திராவிடமொழி என்பது நன்கு விளங்கும்." (ப. 17) என்று பல காரணங்களைக் காட்டி இவர் விளக்கியதை இன்றுவரை யாரும் மறுக்கவில்லை. சொல்லாட்சியும் பயனும் தமிழ்ச் சொற்கள் பல இருக்க அவற்றைவிட்டு வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துவாரை எண்ணி நைந்து 'தலைச் சோறு’ என்னும் கட்டுரையைத் தந்துள் ளார். சோறு என்னும் இனிய செந்தமிழ்ச் சொல்லை இக்காலத்தே (போலி) நாகரிகம் உடையோர் தம் நாவால் கூறவும் கூசுகின்றனர். பிறர் அச் சொல்லை வழங்கின், அவரைப் பட்டிக்காட்டார் என இகழும் குறிப்புடன் நோக்குகின்றனர். சிற்சில வேளைகளில் "சாதம்’ எனச் கூறித் திருத்தவும் முற்படுகின்றனர் ” (ப. 21) என்று எண்ணியபின் தலைச்சோறு’ என்று சொல்லினைக் காட்டி மகிழ்கின்ருர். மு. வ. இப்படியே மொழிபெயர்ப்ப தில் அமைய வேண்டிய நல்ல முறையினையும் சுட்டிக் காட்டுகிருர். (ப. 42) இக்காலத்தில் சென்னை முதலிய பெருநகரங்களிலெல் லாம் தமிழர் அல்லாதார் கையில் பெரிய வணிக நிலையங்,