பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்நாள் சொற்பொழிவு-(31-1-78) இலக்கியம் உலகில் வாழும் உயிரினங்களில் தலையாயவன் மனிதன். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் எண்ணிப் பகுத்துணர்ந்து நல்லன செய்து அல்லன மாற்றி அவனியை வாழ வைப்பது அவன் பண்பாகும். அவன் தோன்றிய காலம் எதுவாயினும், அவன் மொழியறிந்து அதல்ை மற்றவரோடு கலந்து பயின்று வாழக் கற்றுக் கொண்ட நாளே சிறந்தது. அதனினும் அந்த மொழி வழியே 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வில் இலக்கியம் கண்ட நாள் சிறந்ததாகும். அவனுடைய தூய உள்ளத்தில் எண்ணம் தோன்ற, அந்த எண்ணத்தின் வழியே எழுத்துக்கள் நிரல்பட அமைய அதை வாய் மொழிய - கை தீட்ட - பாடிய - எழுதிய இலக்கியம் தோன்றிய நாள்தான், மிகமிகச் சிறந்ததாய் அவன் பண்பினைப் பாரறியச் செய்து பார் உள்ளளவும் அவனையும் அவன் வழியே உருவாகும் சமுதாயத்தையும் வாழவைக்கத் தொடங்கிய நாளாகும். அந்நாள் தொட்டு அவன் பல்வேறு மொழிகளில் பல்வேறு வகைகளில் எண் ணற்ற இலக்கியங்களை இயற்றி ஏற்றமுற்று வாழ்கின்றன். 'உளங் குளிர்ந்த போதெல்லாம் உவந்துவந்து பாடும் அவன் உள்ளத்துணர்வே உயர்ந்து நிற்க, அதன்வழி உருவாகும் இலக்கியங்களே இன்று உலகை நடத்திச் செல்லுகின்றன என்பது உண்மையாகும். கற்று உணர்ந்து போற்றும் நல்ல இலக்கியங்கள் இவ்வாறு உலகை நடத்திச் செல்லுவது மட்டுமன்றி, தாமும் காலத்தை வென்று வாழ்வனவாகும். ஆம்! தாம் மட்டு மன்றித் தம்மை உலகுக்கு அளித்த தலைவனம் கவிஞனை