பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மொழி நாட்டில் நன்கு வளரவேண்டிய வழித் துறைகளைக் காட்டி ஆக்கப் பணிக்கு அடிகோலுகிருர். எழுத்தும் சொல்லும் இந்த அடிப்படையிலேயே எழுத்தின் கதை. சொல்லின் கதை, மொழியின் கதை என்ற மூன்று சிறு நூல்களும், எழுந்தன. இம்மூன்றிலும் அவ்வவற்றின்வரலாறு, அமைப்பு வைப்புமுறை, வழக்காறு இன்னபிற இயல்புகளையெல் லாம் கற்ருரும் கல்லாரும் ஒருசேர உணர்ந்து போற்றும் வகையில் எழுதியுள்ளார். இவரைப் போன்று தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர் இவரினும் வேறு இலர் என்று திட்டமாகச் சொல்லலாம். "எழுத்தின் கதை'யிலே சித்திர எழுத்துக்கள் எவ்வெவ் வாறு தோன்றி வளர்ந்தன என்பதையும், அடுத்து ஆப்பு வடிவ எழுத்துக்கள் நிலை பற்றியும் விளக்கிக்கூறி, பின் அரபு, சீன, தமிழ் எழுத்துக்களைப் பற்றி எடுத்துக் காட்டு கிருர், 39 பக்கமே உள்ள இந்தச் சிறுநூலில் எழுத்தின் வடிவம் பற்றி எண்ணிப் பார்க்கக் கூட முடியாத பல நுண்ணிய உண்மைகளை இவர் எடுத்துக் காட்டி மொழியின் அடிப்படைத் தன்மையினை யாரும் அறிய விளக்கிவிட்டார் எனலாம். 'இப்போது நாம் எழுதும் எழுத்துக்கள் ஒலிகளின் அடையாளங்கள். அந்தப், பழைய எழுத்துக்கள் பொருள்களின் படங்கள். படங்களாக இருந்த எழுத்துக்கள் மாறி மாறித்தான், நாம் எழுதும் எழுத் துக்கள்-ஒலிகளின் அடையாளங்கள்-ஏற்பட்டன" (ப. 14) என்றும், "நம்முடைய எழுத்துக்களில் கோடுகள் மிகுதி யாக இருக்கின்றன அல்லவா? ஆப்பு வடிவ எழுத்துக் களிலிருந்துதான் இப்படிக் கோடுகள் எழுதக் கற்றுக் கொண்டோம்" (ப. 18).