பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 களும் விளக்கங்களும் கற்றரையும் பிணித்து உணர வைக் கும் தன்மையில் உள்ளன. இறுதியாகத் தம் தாய் மொழியை நினைந்து, ஆகவே மொழி ஒரு அருமையான கலை என்றும், நம்முடைய தாய்மொழி நமக்குப் பரம் பரைச் சொத்தாக வந்திருக்கும் தனிச் சிறப்புடைய கலை என்றும் உணர வேண்டும்' என நமக்கெல்லாம் உணர்த்து கிருர். இத் தொன்மை வாய்ந்த பரம்பரைச் செல்வத்தைக் காப்பதற்கெனவேதான் இவர், நாம் இதுவரையில் கண்ட பல நூல்களை எழுதி, எண்ணற்ற கருத்துக்களை வாரி வீசி நமக்கெல்லாம் வழிகாட்டியாக நின்று விளங்குகின்றர். மொழிநூற் புலவர் இச் சிறு நூல்களைத் தவிர்த்து டாக்டர் மு.வ. அவர்கள் மொழிநூற் புலவர் எனப் போற்றப்பெற்ற வகையில் சிறந்த இரு நூல்களை-மொழி நூல்', 'மொழி வரலாறு' என்ற இரண்டினையும் எழுதி, அந்தத் துறைக்கே ஒரு வழி காட்டியாக அமைந்துள்ளார். தமிழகத்தில் இன்று அத் துறை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றலும் முப்பது ஆண்டுகளுக்குமுன் அத்துறையில் கருத்திருத்துவார் இல்லை. எங்கோ முதுகலை, புலவர் வகுப்புகளுக்குப் பாட மாக வைக்கப்பட்ட ஒரு சில பகுதிகளை அப்படியே ஆங் கில நூல்களைப் பின்பற்றியோ இரண்டொரு மொழி பெயர்ப்பு நூல்களைப் பின்பற்றியோ சிலர் பாடம் நடத்தி வந்தனர், எனினும் அத்துறையில் ஆழ்ந்த புலமையும் விளக்கும் திறனும் உடையோர் இல்லை. திரு. ரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள் அண்னமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது ஒரளவு இத்துறையில் கருத்திருத்தி சில வற்றை நன்கு தொகுத்து நூல்கள் வெளியிட முயற்சி செய்தார் என்றலும், அவர் சென்னைக்கு வந்த பிறகு, அந்த எண்ணத்தை விட்டு முழுக்க முழுக்க இலக்கியத் துறையிலே ஈடுபட்டார். ஏதோ அரசி யல் சம்பந்தமாக மொழிபெயர்ப்பு முதலியவற்றில் அவர் தம் மொழியியல் புலமை பயன்பட்டதாயினும் நூலாக அமைந்து வெளிவரும் அளவு அவர் கருத்திருத்தவில்லை. கால்டுவெல் போன்ருேர்தம் பெருநூல்களையெல்லாம்