பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 நன்கு பயின்ற போதும் அவற்றை மொழிபெயர்த்து வைத திருந்தும் ஏனே அவற்றை வெளிக்கொணரவில்லை. ஆனல் மு. வ. அவர்கள் அத்துறையில் நன்கு பயின்று இரண்டு நல்ல பெரிய நூல்களை வெளியிட்டு மொழி வாழ்வினைத் திறம்படச் செய்துள்ளார். இந்த இரண்டு நூல்களையும் தமிழ் பயிலும் மாணவரும் மற்றவர்களும் நன்கு பயின்றுள் ளார்கள்; பயின்றும் வருகிருர்கள். தமிழ் மொழி வரலாறு' பற்றி இவர் எழுதுவதற்கு முன்னரே சிலர் எழுதியிருக்கிருர் கள். என்ருலும் அவை பொதுவான மொழி அமைப்பின் இலக்கணமாக அமையாது. திராவிட மொழிக்குடும்பதமிழ் மொழிக் குடும்ப வரலாருக அமைந்தவை. டாக்டர் மு. வ. அவர்கள் எளிமையாகச் சிறுவர்கள் புரிந்து கொள் ளும் வகையில் தம் கருத்துக்களை விளக்கியுள்ளார். மேலும் பல மேலை நாட்டு ஆய்வாளர்தம் கொள்கைகளை யும் கருத்தினையும் உட்கொண்டு பலவற்றைக் துருவித் துருவி ஆய்ந்து, பின்வருவோர் பலரும் அதன் வழியே கருத்திருத்திச் செயல்படும்வகையில் தம் மொழி வரலாறு என்னும் நூலை எழுதியுள்ளார். அப்படியே மொழி நூலை யும் ஒலிவகை தொடங்கி சொற்ருெடர் வரையில் இரண் டிற்கும் இடைப்பட்ட பல்வேறு மாறுபாடுகள், பிரிவுகள் இவற்கையெல்லாம் விளக்கி,நன்கு காட்டி, பல மேட்ைடு அறிஞர்தம் மேற்கோள் சான்றுகளுடன் ஆக்கியுள்ளார். இன்றைய தமிழ்நாட்டு மொழிநூல் ஆய்வாளர் பலருக்கும் இந்த நூல்கள் இரண்டும் முன்னோடிகளாய்-வழிகாட்டி களாய்-விளக்கங்களாய் உள்ளன. ஆய்வின் பெருக்கத் தால் - புதிய கண்டுபிடிப்புகளால் ஒரு சில மாறுபாடுகள் காணப்படும் இந்த மொழியியல் அடிப்படையில் டாக்டர் மு. வ. ஆய்ந்துணர்ந்து கண்ட உண்மைகள் இன்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளமையை எண்ணிப் போற்றக் கடமைப்பட்டிருக்கிருேம். இந்த மொழிநூல் எழுத இவர் எடுத்துக்கொண்ட முயற்சியை நான் அருகிலிருந்து கண்டவன். மேலும் அவர் பயின்ற உடன் துணையாகக் கொண்ட ஆங்கில நூல் பட்டியலும் , அவர் தாம் எழுதிய இந்நூலுக்காக அவற்றையெல்லாம்