பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பயின்று செலவிட்ட பல நாட்களை எண்ணவைக்கும் என்பது உறுதி. மேலும் நாவல் போன்றவற்றிற்கும் வேறு பிறவற்றிற் கும் சிறு சிறு முன்னுரையோ அல்லது மற்றவர்தம் அறி முகமோ கொண்டு நூல்களை வெளியிடும் இவர் இதற்கு மட்டும் நீண்ட முன்னுரை ஒன்று எழுதியிருப்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். இம் முன்னுரையில் இத் தகைய ஆய்வும் நூலும் இன்றியமையாதன என்பதை நன்கு சுட்டிக் காட்டுகிறர். "மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பிணக்கும் போராட்டமூம் உள்ளன. மொழியின் பழ. மையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை வருகின்றது. இந்தப் பிணக்கு, போராட்டம், பகைமை எல்லாம் வேண்டா தவை; வீண். இவ்வாறு உணர்த்த வல்லது மொழியின் ஆராய்ச்சியே." "இலக்கியம் என்பது மொழியின் நிலை பெற்ற வாழ்வு. இலக்கணம் என்பது மொழியின் இறந்தகால நிலையை விளக்கி நிகழ்கால நிலையைச் சொல்ல முயல் வது; மொழியியல் என்பது மொழியின் வரலாற்றை விளக்குவதோடு நிகழ்கால நிலையைத் தெளிவாக்கி எதிர்காலப் போக்கையும் அறிவிக்க வல்லது.” 'இதுபோன்ற அரிய உண்மைகளையும் கருத்துக் களையும் கற்கத் தொடங்குவார்க்கு மொழிநூல் ஒரு தனிக் கலையாக விளங்கும். ... இந்த அருங்கலை தமிழ் நாட்டில் பரவுவதற்குக் காரணமாக இருந்து மொழித் தொண்டாற்றியவர் டாக்டர் கால்டுவெலே. ... மொழி நூல் ஆராய்ச்சிக் கண்கொண்டு தொல்காப்பியம் முத லான பழைய நூல்களைக் காணக் காண, தமிழ்மொழி யின் சிறப்பும் தமிழ் சான்றேரின் பெருமையும் நன்கு விளங்குகின்றன" (முன்னுரை)