பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 என்று இம்மொழியியல் பற்றிய உண்மையினை விளக்கி, தாம் முதுகலை வகுப்பில் பாடமாக இதை நடத்த நேர்ந்த மையே இந்நூல் வெளிவரக் காரணம் என்பதையும் சுட்டி யுள்ளார். மொழி வரலாறும் அத்தகையதே. தமிழ்மொழி வரலாற்றைத் தனியாக எழுத நினைத்த இவர் முதலில் பொதுவான மொழியின் வரலாற்றினை எழுதி, அதனேடு உலக மொழி இனங்களையும் திராவிட மொழிகளையும் விளக்கு முகத்தான் இந்த நூலை யாத்துள் ளார். இந்த வகையில் இவரே முன்னுரையில் குறிப்பிட்ட படி தமிழில் பொதுவான மொழி வரலாற்று நூல் இல்லை என்பது தெளிவு. இவர் இந்நூலின் முதலில் குறித்துள்ள மேற்கோள் பகுதியில் வரும் நூல் வரிசையைக் காணின் இவர் இவ்வளவு நூல்களைப் பயின்றுள்ளனரா என்ற மலைப்பு உண்டாகும். அதில் 45 நூல்களை அகர வரிசைப் படுத்தித் தந்துள்ளார் இவர். இவற்றுள் ஜெஸ்பர்சன் (Jesperson) udmägib (p6bGoi (Max Mullar) (66u6irtą-f6id (J. Wendryes) போன்ருேர்தம் நூல்களைத் துருவித் துருவி இவர் கற்ற காலையின் உடன் இருந்த என் போன்றேர்க் கும் பல நுணுக்கங்களை அவ்வப்போது இவர் விளக்கியது இன்னும் நினைவில் உள்ளது. இந்நூலுள் இவருக்கு இயல் பாக உள்ள உலக ஒருமைகாணும் கருத்துகளும் மொழி அடிப்படையில் அமையவேண்டிய நிலைகளும் ஆங் காங்கே சுட்டிக் காட்டப்பெறுகின்றன. மற்றும் மொழி தோன்றி வளர்ந்த வரலாற்றினையும் பிறவற்றையும் பிள்ளை களுக்குக் கதை சொல்வதுபோலப் பல உவமைகளையும் காட்டி விளக்கும் திறன் எண்ணத்தக்க ஒன்ருகும். "மொழியின் ஒவ்வொரு சொல்லும் மூளை பல வகையாக எண்ணி எண்ணி வளர்த்த வளர்ச்சியைக் காட்டுகிறது." என்று மேலைநாட்டு அறிஞர் குறித்த உண்மையினையும் இவ்வாறே பிறர் தொட்டுக்காட்டிய பல நுணுக்கங்களை 1. (G. K. Zipf - The Psycho - Biology of Language)