பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 யும் இவர் பல்வேறு தலைப்புக்களில் விளக்கிக் காட்டு வதைக் கற்ருேர் பயிலின் வியவாதிரார். மொழியில் சில சொற்கள் மக்களின் மூட நம்பிக்கை களின் காரணமாகத் தோன்றி வளர்ந்து இன்றளவும் வழக்கத்தில் உள்ள தன்மையினைத் தனியாக ஏழாவது பகுதியில் நன்கு விளக்கியுள்ளார். பாட்டனுடைய பெயரைப் பேரனுக்கு இட்டு அவரைப் பேரன் ஆக்கிய முறையும் (ப. 45), யெட்டோ (Yeddo) டோகியோ (Tokyo) ஆன வரலாறும் (ப. 46), முருங்கைக் காய் கொம்புக் காயான வரலாறும் (ப. 46), செத்தாரைத் ‘துஞ்சினர்’ என்ற சொல் மரபும் (47), உப்பைச் சர்க்கரை என வழங்கும் மரபும் (48) பிறவும் நன்கு சுட்டிக் காட்டப் பெற்று மொழி மரபுக்கு இவை வேறுபட்டவையாயினும், மூடப்பழக்க வழக்கங்களால் இவையும் மொழியில் நிலைத்த இடம் பெற்ற தன்மையை விளக்குகிறர். இவ்வாறே வெறும் வழக்கத்தின் காரணமாகச் சில சொற்கள் (இலக்கண மரபில் மாறுபடினும்) மொழியில் இடம் பெற்று நிலைபெற்ற தன்மையினையும் சுட்டிக் காட்டுகிறர். இவ்வாறே மக்கள் பொது வழக்குச் சொற்கள் பல இலக்கிய வழக்கினைப் பெற்று இலக்கியச் சொற்களாகவே ஆனமை குறிக்கப் பெறுகின்றது. இவ்வாறு மக்கள் வாழ்வொடு பலவகையில் பின்னிப் பிணைந்த வழக்குமொழிகள் பின்பே இலக்கண மரபினையும் முறைகளையும் விதிகளையும் பெற்றன என விளக்கும் இவரது ஒன்பதாவது அதிகாரம் தான் இலக்கணத்தைத் தொடுகிறது. பின்பும் குழந்தை மொழி என்ற தலைப்பிலும் பிறவகையிலும் இலக்கண வழி யெனவும் மரபெனவும் கொள்ளக் கூடிய சொற்களையும் குறிக்கத் தவறவில்லை. பொருளற்ற குழந்தை ஒலிகொண்டு பொருள் காணும் பெற்றேர் நிலையில் தாமும் இருந்து அச் சொற்களையெல்லாம் மொழிவழிப்படுத்தும் இவர் உள்ளம் உயர்ந்ததாகும்.