பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 'குழந்தையின் கல்வியில் காணும் பல உண்மை களும், மொழி வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்த உண்மையாகும்" (ப. 213) என்றும் 'நானுக்கு' என்றும் 'நீக்கு என்றும் குழந்தை பேசிப் பெற்ருேர் செவிக்கு அமிழ்தம் ஊட்டும் (ப. 213) என்றும், காட்டி குழந்தை மொழிகள் இலக்கணமற்றவை போன்று தோன்றிலுைம் அவற்றையும் இலக்கண மரபில் இவர் இணைத்துக் காட்டுகிருர். இவ்வாறு பொதுவாக மொழிகளின் அடிப்படை நிலைகளையும் அவற்றுள் பல்வேறு காரணங்கள் இடைப் பட்டுத் தோன்றும் சொற்களையும் அவற்றில் அமைந்த பொருளமைதி முதலியவற்றையும் விளக்கமாகச் சுட்டிக் காட்டி, பிறகே மொழிகள் முறைப்படி பெற்ற இலக்கண மரபினைக் காட்டி செல்லுகிருர், அப்படியே மொழிக் கலப் பினுலும் சொற்களைக் கடன் வாங்குவதலுைம், உண்டாகும் மாற்றங்களையும் நிலைகளையும் விளக்குகிருர். பின்னர் உலக மொழிகளின் பல்வேறு வகைப்பட்ட தன்மைகளை விளக்கி அவ்வவற்றின் தன்மை, இயல்பு, முறை, மரபு ஆகிய வற்றையும் சுட்டிக் காட்டுகிறர். இறுதியாக எழுத்து என்னும் தலைப்பில் எழுத்துமொழி பெற்ற சிறப்பினையும் எழுத்து எழுந்த நிலையினையும் எழுத்துக்கள் காலந்தொறும் பெற்ற மாறுபாட்டினையும் பிறவற்றையும் நன்கு விளக்கிக் காட்டுகிறர். பல்வேறு வகைப்பட்ட எழுத்துக்களின் வகைகளை விளக்குவதோடு வட்டெழுத்து, வடஇந்திய எழுத்துக்களின் வேறுபாட்டினையும் விளக்குகிருர். இறுதி யாக எண்கள் பெறும் படிவத்தையும் அவை கல்வெட்டு களில் பெற்ற வளர்ச்சியையும் காட்டி நூலை முடிக்கிருர். இவருடைய நூல்கள் அனைத்திலும் இம்மொழி வரலாறு கண்மணி போன்ற ஒன்று எனக் கொள்ளல் தவறில்லை. பலருக்கும் புரியாத எத்தனையோ நுணுக்கங்களை இவர் தெளிவுடன் காட்டியிருப்பதை நூல் வழியே கண்டு அறியுமாறு வேண்டி மேலே செல்கின்றேன்.