பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 எனவே இந்த இருநூல்களும் மொழியின் எல்லா வகையான தன்மைகளையும், அமைப்பு முதலான வற்றையும் வரலாறு முதலானவற்றையும் காட்டுவதோடு, அவை சமுதாயத்துக்கு உதவும் தன்மைகளையும் விளக்கு வனவாகும். இவர் முன்னுரையில் குறிப்பிட்டபடி பாடம் நடத்திய குறிப்பின் வழியே இவற்றை எழுதிலுைம், முன் குறிப்பிட்டபடி இத்தகைய மொழிநூல். மொழி வரலாறு முதலியன மொழி பற்றி மக்கள் உள்ளங்களில் எழும் பிணக்கையும் மாறுபாட்டையும் நீக்க வழி கோல வேண்டுமென்பதே இவர் விருப்பம். ஆம்! எந்த வகையில் நூல் எழுதினாலும் அதன் அடிப்படை சமுதாயம் இணைந்து வேறுபாடற்று வாழவேண்டுமென்பதே இவர் குறிக்கோள். மொழி நூலும் மொழி வரலாறும் அந்த வகையில் ஆக்கப் பணிக்கு வழிகோலும் என்று உண்மையில் இவர் நம்பினர் இந்த நெறியில் மொழிகளை ஆராய்ந்தால் மொழிக்காழ்ப்பும் பிற வேறுபாடுகளும் உண்டாகா என்பது உண்மை யன்ருே! இத்த இரு நூல்களைப் பற்றியும் இவற்றில் இவர் காட்டும் மொழி அமைப்பு, சொல்லமைப்பு, இலக்கண மரபு, எழுத்து வகை, மொழி தோன்றிய வரலாறு, மொழிக் குடும்பங்கள், அவற்றின் வரலாறு இவைகளையும் எழுதத் தொடங்கின் அது பெருநூலாக முடியும். மேலும் இங்குள்ளவர்களும் நாட்டு அறிஞர்களும் இவற்றை நுணுகி ஆராய்ந்துள்ளனர் என்பதும் தெளிவு. எனவே இவற்றுள் நான் மேலும் நுழைந்து ஒவ்வொன்ருக எடுத்து காட்ட வேண்டா என எண்ணுகிறேன். இலக்கியத் திறய்ைவாளர் தமிழ்மொழி-உலகமொழிகள் ஆகியவற்றைப் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்து அவற்றின் திறன் போற்றி, உயர்ந்த இரு பெரு நூல்களையும் அவற்ருெடு சில சிறு நூல்களையும் எழுதி, மொழிக்கு-சிறப்பாகத் தமிழ் மொழி க்கு இவர் செய்த தொண்டுகளுள் ஒரு சிலவற்றை இங்கே கண்டோம். முன்னர் இவர்தம் இலக்கியப் படைப்பின்