பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. யைத் திறய்ைவு பற்றி நூல்கள் எழுதிய மேலைநாட்டு அறிஞர்க ளனைவரும் திட்டமாக வற்புறுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் இன்றி வேறு வகையில் திறய்ைவு அமையின் அது பயன்படாது கெட்டொழிவது ஒருதலை. இந்த நூலில் இவர் நூல்களைப் பயிலவேண்டிய வகை யினை 'அகல உழுதல், ஆழ உழுதல் என்ற வகை யில் விளக்கியதோடு நல்ல நூல்களைத் தேர்ந்து பயில வேண்டும் என்ற முறையினையும் சுட்டுகிருர். 'நல்ல நூல் என்பதுஎழுத்துச்சொற்பொருள்களான ஏடுகள் அடங்கிய ஒன்றன்று; நமக்குக் காட்சி அளித்துக் கருணை பொழிய என்றும் எங்கும் நமக் காகக் காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம் எனலாம்.' என்று நல்ல நூலைக் குறிப்பிட்டு இந்த நிலைக்குத் தமிழில் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் குறிக்கின்ருர். இந்த இரண்டு நூல்களையும் இவர் தனித்த முறையில் திறய்ைவு செய்து உலகுக்குத் தெளிவு தந்ததனை மேலே காணலாம். இந்த இலக்கியக் கலையின் திறன் உணர்வது எளிதன்று என்பதையும் உணர்ந்தால் பெறும் நிலை உயரி யது என்பதையும் "பர்னட்ஷா, சி.ஈ.எம்.ஜோட், ஷெல்லி, ரெய்னல்ட்ஸ் ஆகிய மேலைநாட்டு அறிஞர்கள் வழி நின்று ஆராய்ந்து, தயக்கமில்லாமல் எதையும் சீர்தூக்கி உணரும் நிலையினைக் காட்டுகிருர். பழங்காலச் சங்கப் பலகையினை ஒட்டி, இந்த ஆய்வுச் சங்கப் பலகையில் இடம் கிடைப்ப தற்கும் பொறுமை, முயற்சி முதலியன இன்றியமையாதது என்பதையும் சுட்டுகிருர். (ப. 44) நேர்மையான ஆராய்ச்சியில் தலைப்பட்டு,. இலக் கியப் பூஞ்சோலையுள் நுழைந்து கலை வண்டாய்ப் பறந்து பல்வகை மணமும் நுகர்ந்த பிறகுதான் உண்மை விளங்கும்; உலகம் பலவகை என்பது