பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. உள்ளத்து உணர்ச்சியின் பலவகை வேறுபாடுகளைக் காட்டுவது போலவே, உணர்ச்சியின் கலைவடிவான இலக்கியமும் பலவகை, இலக்கிய ஆராய்ச்சியும் பல் வேறு வகை என்பதையும் விளக்கும்." (ப. 49) என்று இவ்வாராய்ச்சியில் அமைந்த பல்வேறு வகையினை இவர் சுட்டுகிருர். ஆம்! இவரே இத்தகைய நெறிநின்று தம்மை மறந்து பல்வேறு வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட் டுள்ளார் என்பதை இவர்தம் நூல்களைப் பயின்ருர் நன்கு அறிவர். பெரிய இலக்கியங்களை இளைஞர், மாணவர் போன்ருேர் போற்றும் வகையிலும், பொதுமக்கள் போற் றும் வகையிலும் அதே வேளையில் அறிஞர்கள் சீர்தூக்கிப் பாராட்டும் வகையிலும் இலக்கியங்களின் திறம் கண்டு இவர் விளக்கியுள்ளார். அப்படியே இலக்கியங்களைப் பல்வேறு கோணங்களின் நின்று அவற்றின் தன்மை, தோன்றிய கால, இடச் சூழல்கள், பயன், பண்பு முதலிய வற்றையும் விளக்கிக் காட்டுகின்ருர். நல்ல நூல்கள் காலத்தை வென்று வாழ்வதற்கும் பல 'புற்றிசல்'களாய் உடனுக்குடன் மாய்வதற்கும் உரிய காரணங்களை ஆய்ந்து காட்டித் தம் நெஞ்சத்தைப் பண் படுத்திக்கொண்டு, உ ல கூ ட் டு ம் காவிரி போன்று தண்ணளி உடையவராய், இலக்கிய வளனை வழிவழியாக வருவோர் பெறுமாறு ஆற்றுப்படுத்தி, தன் கடமையைச் செய்துகொண்டு, நன்றி மறவாது வாழ்வார் நெஞ்சத்தில் ஊறிச் சுரக்கும் இலக்கியங்களே காலத்தை வென்று வாழும் எனக் காட்டுகிறர். (ப. 78-79) பாட்டின் நிலைபற்றி இவர் சுட்டும் கருத்தினை இங்கே அப்படியே காட்ட விரும்புகிறேன். "பலவகைக் கட்டுப்பாடுகளிலிருந்து பாட்டு விடுதலைப் பெறப் பெற, பல்வேறு துறைகளில் உண் மைகளைப் புலப்படுத்தும் ஆற்றலையும் அது பெற்று வருகிறது. மற்றக் கலைகளுக்கு இல்லாத சிறப்பு இப்