பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பாட்டுக் கலைக்கு இருப்பது இதல்ை ஆகும். மனிதன் வளர்ச்சியோடு மற்றக் கலைகள் போட்டியிட முடிய வில்லை. ஆனல் பாட்டுக் கலையோ மனிதன் வளரும் அளவிற்குத் தானும் வளர்ந்து அவனுக்கு உற்ற துணையாக நிற்கின்றது. மனிதன் குழந்தை போன்ற உணர்ச்சி மிக்க நிலையிலிருந்து அறிவு நிலைக்கு வளர்ந்து வருகிறன். பாட்டும் அவனுக்கு ஏற்ப, உணர்ச்சியின் அடிப்படையின் உண்மைகளைப் புலப்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது. உணர்ச்சி நிலைக்கு மட்டும் பயன்படும் மற்றக் கலைகள் பின் ஏங்கி நிற்க, பாட்டுக் கலை அவற்றினின்றும் விடுதலை பெற்று மனிதனுக்குத் தோழய்ை முன்னேறுகிறது.” (ப. 117-118) என்ற வரிகளைப் படிக்கும்போது இம்மனித சமுதாயம் எப்படி இலக்கியமாகிய பாட்டுக் கலையோடு ஒன்றி விட்டது என்பது நன்கு புலப்படுகின்றதன்ருே? இந்த இலக்கியத்துக்குப் பல எல்லைகள் வகுத்தும் சட்டங்க ளிட்டும் வரையறுக்கும் மனப்பான்மையை உயர்ந்த புலவர்கள் வெறுப்பது போன்றே சிலரும் வெறுத் தொதுக்குகிருர். இலக்கியத்தின் அகலத்தையும் நீளத்தை யும் உயரத்தையும் அளந்து எக்காலத்திற்கும் உரிய விதி களாக வற்புறுத்தல் தவறு எனக் காட்டிப் பிற்காலத்தில் பாட்டியல் இலக்கணம் இயற்றியவர் தவருண போக்கில் வழிகாட்டியதையும் கண்டிக்கிருர் (ப. 131). வேண்டாதனவற்றை நீக்க வேண்டும் என்பதைத் திட்டமாக வற்புறுத்துவர் இவர். வாழ்க்கையில் வேண்டா தனவற்றை விலக்குமாறு நாவல்களில் சுட்டியபடியே மொழியிலும் இலக்கண மரபிலும் வேண்டாதன விலக்கப் பெறவேண்டும் என்பது இவர் கொள்கை, 'ஒரு காலத்தில் இன்றியமையாதனவாக இருந்த கஃறீது, முஃடீது, செய்கு, செய்கும். இலள், இலன்,