பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இலர் முதலிய சொற்கள் இன்று மொழிக்குச் சுமை யாகி விட்டன. ஆகவே இவற்றைப் பற்றிய இலக்கணப் பகுதிகள் வேண்டாதனவாகி விட்டன." (ப. 134) "என்றுமே வேண்டாத இலக்கணப் பகுதிகள் சில உள. அவற்றைத் தண்டி அலங்காரத்திலும் மாறன் அலங்காரத்திலும் காணலாம். குவலயானந் தத்தில் கூறப்படும் சொல்லணிகள் முற்றிலும் வேண்டாதவை- சொல்லணிகள் கனவிலும் கருதத் தகாதவை" (ப. 135) - என்பன போன்று வேண்டாத பலவற்றைத் திட்டமாக விளக்குகிருர். ஈண்டு ஒன்றையே சுட்டிக் காட்டினேன். கவிஞர்களைப் பற்றி பிளேட்டோ (Plato-The Re. public) என்பார் எழுதிய கருத்துக்களை விளக்கி ஆய்ந்து விட முடியாதது என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கட்டுரை அக்கவிஞர்தம் போக்கு, தன்மை, புலமை,பண் பாடு முதலியவற்றை விளக்குவதாகும். கவிஞரிடத்தும் அவர்தம் கவிகளிடத்தும் குறைகாணுவோர் இருப்பினும் கூட, அந்தக் குறைகளையெல்லாம் கடந்து, அக்கவிகள் வாழ்வொடு பொருந்திய தொடர்பினை, உணர்ந்து அவற்றை வாழ்வுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மக்களின் கடமையை இறுதியாகக் காட்டி அக்கட்டுரையை முடிக்கிறர். இலக்கியம் காலந்தொறும் மாறும் தன்மையுடைய தென்பதையும் (171), அம்மாற்றத்துக்கான சூழ்நிலைகள் எத்தகையன என்பதையும் இலக்கியம் கற்பார் எந்த வகையில் தம்மை அந்த இலக்கியங்களுக்கு உரிமை யாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும், நூல்களை ஆராயும் படிகளும் வகைகளும் எத்தகையன என்பதை யும் நூலின் இறுதிக் கட்டுரைகளில் சுட்டுகிறர். எனவே இந்நூல் முழுதும் இலக்கியத்திறன் காணும் செறிவு