பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அப்படியே மொழிபெயர்த்து எடுத்தாளுகிறர்.(ப.242-467) இவர் மேலைநாட்டுப் புலவர்தம் கருத்துக்களை எடுத் தாளும்போது, அவற்றை மொழிபெயர்த்து எழுதி இன்னர் கூறுகிருர் என்ற குறிப்புடன் அமையாது, அந்தந்தப் பக்கத்திலேயே மூலத்தை ஆங்கிலத்திலேயே குறித்து (நூல், பக்க எண் உட்பட), அவற்றைத் தம் கையாண்ட தைச் சுட்டிக் காட்டுவார். ஆய்வாளர் சிலர் இவ்வாறு செய்வது இல்லை என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும். சிலர் அவற்றைத் தாமே கண்டது போலவும் கூறுவர்; சிலர் அப்படிக் காட்ட நேரினும் என்று இன்னர் கூறியுள் ளார்' என்று பக்க எண் மட்டும் சில இடங்களில் சுட்டியும் செல்வர். ஆயினும் மு. வ. அவர்கள் ஆங்கில மூலங்களை அப்படி அப்படியே-அந்தந்தப் பக்கங்களிலேயே அடிக் குறிப்பாக இட்டுச் செல்வது இவர் நேர்மைக்கும் பண்பிற் கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். உணர்த்தும் திறனை வற்புறுத்துவது போன்றே, அந்த நூல்களைப் பயில்வார் நுகரும் தகுதியும் பெறவேண்டும் என்பதையும் இவர் சுட் டிக்காட்டத் தவறவில்லை. நுகரும் வகையில் பெறும் பல நிலைகளையும் சொல் வகையிலும்நுகரும்உணர்ச்சி நிலைகளை யும், அவற்றை ஏற்கும் மனநிலையினையும் சுட்டுகிருர், கடைசியாக ஆராய்ச்சி என்ற தலைப்பிலே இந்தத் திறய்ைவு முறை அமையவேண்டிய அடிப்படைத் தன்மைகளையும் அதனேடு தொடர்பான பிறவற்றையும் விளக்குகிருர். முடிவாக,

இலக்கிய ஆராய்ச்சி இருவகையில் பயன் விளக்கிறது. ஒன்று இலக்கியத்தை அது நன்கு விளக்குகிறது; மற்றென்று, இலக்கியத்தில் சிறந்தது, சிறப்பற்றது என்று தேர்ந்து அறிவிக்கிறது. ஆகவே கற்கும் இலக்கியத்தை நன்ருகக் கற்கவும் தக்கதைக் கொண்டு தகாததைக் கைவிடவும் அது உதவி யாகிறது." (ப. 331)

அன்றும், இலக்கிய ஆராய்ச்சியாளார் இருக்க வேண்டிய நிலையை,