பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்களையும் காவியம், நாடகம், நாவல், சிறுகதை ஆகிய பகுதிகளில் அடக்கிக காட்டி, இறுதியாக மரபு' பற்றிய விளக்கத்தினையும் தந்துள்ளார். தொல்காப்பியனர் காலந் தொடங்கி இன்று வரை வளர்ந்துள்ள இலக்கியங்களைப் பாகுபடுத்திக் காட்டி தமிழில் வளர்ந்துள்ள இலக்கிய நெறியினை இதில் சுட்டு கிருர். அவற்றுள் அமைந்த அகம் புற வேறுபாடு, ஐந்தினை அமைப்பு போன்றவற்றையும் சுட்டிக் காட்டியே பிறகு பாகுபாட்டை உணர்த்துகிருர். அவ்வாறே பிற மொழிகளில் அமைந்த பாகுபாடுகளையும் சுட்டுகிறர். பின் ஒவ்வொன் ருகக் காவியம், நாடகம், நாவல், சிறுகதை ஆகியவற்றின் தன்மை, அமைப்பு, வகை, வரலாறு முதலி யவற்றைத் தெள்ளத் தெளியக் காட்டிக் கடைசியில் மரபு பற்றிச் சுட்டுகிரு.ர். 'மனிதன் படைக்கும் இலக்கியமும். காலத்திற்கு ஏற்பப் புதிய வடிவங்களைப் பெற்றபோதிலும், பழைய இலக்கியங்களின் தொடர்பையும் அடிப்படையைபும் விடுவதில்லை. அவற்றையே இலக்கிய மரபு என்று கூறுதல் வழக்கம்' (பக். 173) 'பழைய மரபுகள் ஒரளவு இருந்துவர, புதிய இலக்கியங்கள் அந்த மரபுகளை ஒட்டியும் ஒட்டா மலும் காலத்துக்கு ஏற்ப அமைந்து வருதல் உண்டு' (பக். 174) என்று பொதுவாக அமையும் இலக்கிய மரபினைச் சுட்டிக் காட்டிய இவர், பின்பு இடம், காலம், சூழல், தன்மை இன்ன பிறவற்றின் அடிப்படையில் அமைந்த மரபுகளை யும் தொடர்ந்து விளக்கிக் கொண்டே செல்கிருர். பின் னணி,பொருள் பற்றிய மரபுகள், வடிவம் பற்றிய மரபுகள் என்று மரபுவழி அமைவனவற்றையும் பிறவற்றினையும் தொடர்ந்து விளக்கும் இவர் கடைசியாக இம் மரபு நெறி