பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விளக்கிக் கொண்டிருக்கும். இவருடைய பெற்ற மனம், அகல்விளக்கு, விடுதலையா, மனச்சான்று, கயமை, குறட்டை ஒலி, காதல் எங்கே என்பன ஆங்கிலமொழி யிலும், அகல்விளககு குறட்டை ஒலி இரண்டும் ரஷ்ய மொழியிலும், கள்ளோ காவியமோ சிங்கள மொழியிலும், கரித்துண்டு இந்தி மொழியிலும், இளங்கோவடிகள் தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன. எனவே இவரது இத் தமிழ் இலக்கிய வரலாறு பிறமொழிகளில் மொழி பெயர்க்கு முன்னரே வேறு சில நூல்கள் இந்திய நாட்டுப் பிற மொழி களில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளமையின், இவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமன்றிப் பரந்த பாரத நாட்டுக்கும் உலகுக்கும் உரியவரானர். இந்த நூலின் முன்னுரையில் இவர் இந்த நூல் எழுதுவதற்குப் பெற்ற தகுதிகளைத் திரு. தெ. பொ, மீனாட்சிசுந்தரனர் பின்வருமாறு குறிக்கிரு.ர். "தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பணியைத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனரிடம் சாகித்திய அகாதெமி ஒப்படைத்தது. இவர் ஆழ்ந்த புலமை பெற்றவர். தமிழிலக்கியத்தின் அடிப்படைக் கருத்துகளை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிதில் விளக்கும் பேராசிரியர் எனப் பேர் பெற்றுள் ளார். படைப்பாற்றல் பெற்ற எழுத்தாளர். தம்முடைய நாவலுக்குச் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றவர். தமிழில் உள்ள முற்கால இடைக்கால தற்கால இலக்கியங்களில் ஒருசேரத் திளைக்கும் சிலரில் இவரும் ஒருவர். தமக்கே உரிய ஒப்பற்ற முறையில் தமிழ் இலக்கிய வரலாற்றை விளக்கி யுள்ளார். மதிப்பதற்கரிய காணிக்கையாக இது விளங்குகிறது" என்று திரு. தெ. பெ. மீ. அவர்களே போற்றும் போது வேறு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இந்நூலில் மு. வ. அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையினையும் திராவிட மொழி பரவியிருந்த பான்மையினையும் காட்டி