பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அலறவில்லை. அறப்புரட்சி திருக்குறள் நலத்துக்குத் துணைபோவது. 'திருக்குறள் அதிகாரங்களிற் பலப்பல இந் நூலுள் புரட்சிபெற்றிருக்கின்றன. புரட்சி புது உலகை அமைத்தே தீரும். இந் நூற்கண் பலவிடங்களில் பொதுமையும் மனத்துய்மையும் மிளிர்கின்றன. இரண்டும் நூலின் நுரையீரல்கள் என்று கூறல் மிகையாகாது. இவை ஒரு உலகம் ஒரு குலம்’ என்னும் உயிர்ப்பை இயக்குவன." 'இந்நூல் ஒரு நன்னூல்; புதுமைப் பொதுநூல்; உலகம் ஒருகுலமாகச் செய்யும் துணை நூல், இதனை உதவிய ஆசிரியர் வரதராசனர் வாழ்க." என்று திரு வி.க. அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய கருத்துக்களுள் சிலவற்றையே இங்கே நான் குறித் துள்ளேன். அவருடைய அணிந்துறை பதினெட்டுப் பக் கங்களுக்கு நீண்டதாகும். திருக்குறளைத் திறய்ைவு செய்த இவர் நூலைத் திறய்ைவு செய்திருக்கிருர் திரு வி. க. இவ்வாறு இவர் வழியே தக்கவர்களால் தமிழில் திறய்ை வுக் கலை வளர வாய்ப்பு உண்டாயிற்று. இந்த அணிந் துரைத் திறய்ைவில் திரு வி. க. அவர்கள் இந்த நூல்மட்டு மின்றி, திருக்குறளையே திறய்ைவு செய்கின்றர். மேலும் மு. வ. அவர்கள் எழுதிய நூல்கள் பலவற்றையும் இன்று பலர் இவ்வாறே திறய்ைவு செய்கின்றனர். எனவே இவர் திறய்ைவு பற்றிய நூல்களை எழுதித் தாமே தமிழ் நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து அவற்றின் திறனறிந்து போற்றி நூல்கள் வெளியிட்டதோடன்றி, வழி வழி வரும் மக்களும் இத் திறய்ைவுக் கலையில் சிறக்க வழிகாட்டியுள்ளார் என்பது தெளிவு. இனி, இவர்தம் திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக் கத் தில் இவர் திரு. வி. க. காட்டியபடி என்ன புரட்சி செய்துள்ளார் எனக் காணல் நலம். திருக்குறளின் கருத்